மும்பை, பஞ்சாப் போட்டியில் சூப்பர் ஓவரை தாண்டி, ரசிக்க வைத்த அந்த பெண்!

Super over in Mumbai, Punjab match

by Loganathan, Oct 20, 2020, 16:40 PM IST

நேற்று முன்தினம் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி டிராவில் முடிந்ததால், போட்டியானது சூப்பர் ஓவருக்கு சென்றது.சூப்பர் ஓவரில் பஞ்சாப் 5 ரன்கள் எடுக்க, மும்பையும் 5 ரன்களை எடுத்ததால் சூப்பர் ஓவர் மீண்டும் சூப்பர் ஓவராக மாறியது. இதனால் அணியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இரண்டாவது சூப்பர் ஓவரில் மும்பை அணி 11 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, இரண்டு பால் மீதம் வைத்தே இலக்கை எட்டி வெற்றி பெற்றது பஞ்சாப் அணி.சூப்பர் ஓவர் மீண்டும் சூப்பர் ஓவராக மாறியபோது பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா பதற்றத்தில் செய்வதறியாது நகத்தைக் கடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தார். இது ரசிகர்கள் இடையே மிகவும் ரசிக்கப்பட்டது.

ஆனால் ப்ரீத்தி ஜிந்தா போன்ற மற்றொரு பெண்ணும் நகத்தைக் கடித்தபடி அமர்ந்து இருந்தார். இரண்டு சூப்பர் ஓவர்களுக்கு இடையில் டிவியில் காட்டப்பட்டார். திரையில் அந்த பெண் மொத்தமாகக் காட்டப்பட்டது 21 நொடிகள் தான். ஆனால் இவர் காட்டிய ரியாக்ஷன்கள் 21 இலட்சத்தைத் தாண்டும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

சூப்பர் ஓவரை பார்த்து ரசிப்பதா அல்லது இந்த பெண்ணின் க்யூட் ரியாக்ஷன்களை பார்ப்பதா என ரசிகர்கள் குழம்பிப் போனார்கள்.இவரின் பெயர் ரியானி லால்வானி ஆகும். மேலும் இவரின் ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More Ipl league News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை