3 ஆயிரம் ரூபாய்க்கு 5ஜி போன்கள் வழங்க ரிலையன்ஸ் திட்டம்

Advertisement

இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் புதிய 5 ஜி மொபைல் போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக ரிலையன்ஸ் ஜியோ , 5 ஜி ஸ்மார்ட்போனை ரூ .5,000க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.தற்போது நாட்டில் 2 ஜி இணைப்பைப் பயன்படுத்தும் 20 முதல் 30 கோடி மொபைல் போன் பயனர்களைக் குறிவைத்து ஜியோ நிறுவனம் களமிறங்குகிறது.

ஜியோ இந்த சாதனத்தை ரூ .5,000 க்கும் குறைவான விலைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்த விற்பனையை அளவிடுகையில் ஒரு 5 ஜி போனின் விலை 2,500லிருந்து 3,000 ரூபாய் வரை இருக்கும் என்று ரிலையன்ஸ் ஜியோ , நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​5 ஜி ஸ்மார்ட்போன்கள் 27 ஆயிரம் ரூபாயிலிருந்து விற்கப்படுகின்றன. ரிலையன்ஸ் குழுமத்தின் 43வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி இந்தியாவை "2 ஜி-முக்ட்" (2 ஜி இணைப்புகள் இல்லாதது) ஆக்குவதாக உறுதியளித்ததோடு 350 மில்லியன் இந்தியர்களின் (தற்போது 2 ஜி தொலைப்பேசியைப் பயன்படுத்துவோர்) மாற்றத்தைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.ஜியோ பிளாட்ஃபார்ம்களில் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்ட்போன் இயக்க முறைமையை உருவாக்க அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமொன்று ஜியோவுடன் கூட்டுச் சேரப்போவதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க நிறுவனம் தனது சொந்த 5 ஜி நெட்வொர்க் கருவிகளில் செயலாற்றி வருகிறது, மேலும் இந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு சோதனைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்குமாறு தொலைத் துறையைரிலையன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது. எனினும் ரிலையன்ஸ் ஜியோவின் கோரிக்கைக்கு அரசாங்கம் இன்னும் செவிசாய்க்கவில்லை.

தற்போது, ​​இந்தியாவில் 5 ஜி சேவைகள் இல்லை, அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திற்கான உள்நாட்டுச் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கள சோதனைகளை நடத்துவதற்காகத் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு கூட அரசாங்கம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்யவில்லை .

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!

READ MORE ABOUT :

/body>