மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் கீரன் பொல்லார்டு. கடந்த சில போட்டிகளாக ரோஹித் காயம் காரணமாக விலகிக்கொள்ள அணியை திறம்பட வழிநடத்தி வெற்றிவாகை சூடினார் பொல்லார்டு. இதற்கிடையே தான் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் ரோஹித் வர அவரிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்தார் பொல்லார்டு. இந்தப் போட்டியில் மும்பையை தோல்வியை தழுவியது. இதற்கிடையே, போட்டி முடிந்ததும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டார் பொல்லார்டு.
அதில், ``நயவஞ்சகமாக கீழிறக்கி விட நினைக்கும் நண்பனை விட, வெறுக்கிறேன் என முகத்துக்கு நேராகவேக் கூறும் எதிரி எனக்கு இருக்க வேண்டும்" என்ற வாக்கியத்துடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டுருந்தார். இது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. மும்பை அணியின் கேப்டனாக இருந்து அணியை வெற்றி பாதையில் நடத்திய நிலையில் மீண்டும் ரோஹித் திரும்பி கேப்டன் பதவியை பறித்துக்கொண்டதால் தான் இப்படி அதிருப்தியில் பொல்லார்டு பதிவிட்டிருக்கிறார் என்று ஒரு தரப்பினரும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பதவி ஹோல்டருக்கு வழங்கப்பட்டதால் பொல்லார்டு விரக்தியில் உள்ளார் என்று இன்னொரு தரப்பினரும் மாறி கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் பொல்லார்டு குறிப்பிட்ட எதிரி யார் என்பது குறித்து ஒரு பெரிய விவாதமே நடந்து வருகிறது.