வாட்ஸ்-அப் பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு தான் இது... அங்கீகாரமற்ற செயலி பயன்படுத்தினால்

வாட்ஸ்-அப் போலவே இருக்கும் போலி செயலிகளை பயன்படுத்தினால், பயனாளர்களின் கணக்கு முடக்கப்படும் என்று, வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்-அப் நிறுவனத்தின் செயலியை போலவே, பல போலி செயலிகள், வெப்-சைட் ஹேக்கர்களால் ப்ளே ஸ்டோரில் உலவவிடப்படுகிறது. அத்தகைய செயலியை பயன்படுத்தும் போது, தங்களுக்கு தெரியாமலே சொந்த தகவல்களை பிறருக்கு பயனாளர்கள் அளிக்கின்றனர்.

அத்துடன், பிறரை ஏமாற்றவும் போலி செயலிகள் உதவுகின்றன. வாட்ஸ்-அப் கடைசியாக பார்த்த நேரத்தை, இதன் மூலம் மாற்றியமைக்க முடியும். இதுபோன்ற சிக்கல்களால் திணறிப் போன வாட்ஸ்-அப் நிறுவனம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வாட்ஸ்-அப் ப்ளஸ், ஜிபி வாட்ஸ்-அப் போன்ற செயலிகளை பயன்படுத்தும் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் கணக்கு, தற்காலிகமாக முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகளை பயன்படுத்து நபர்கள், உடனே அங்கீகரிக்கப்பட்ட வாட்ஸ்-அப் செயலிக்கு தகவல்களை மாற்றி, அதை மட்டும் பயன்படுத்துமாறு, அது கேட்டுக் கொண்டுள்ளது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்