ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி

Spicy Chettinad Chicken Gravy Recipe

by Isaivaani, Mar 25, 2019, 21:40 PM IST

வீட்டிலேயே செட்டிநாடு ஸ்டைலில் சிக்கன் கிரேவி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ

பட்டை - 1

சோம்பு - 1

கிராம் - 4

ஏலக்காய் - 3

தனியா - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 5

தேங்காய் துருவல் - அரை கப்

முந்திரி - 5

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

பிரியாணி இலை -2

சின்ன வெங்காயம் - 1 கப்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி - 1

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில், ஒரு வாணலியில் பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வதக்கவும்.

அத்துடன், தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இந்த கலவை ஆறியதும், மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில், எண்ணெய்விட்டு பிரியாணி இலை, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வெந்ததும், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்து வைத்த மசாலா, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறியப் பிறகு, தக்காளி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதித்து வரும்போது, சிக்கன் துண்டுகளை சேர்த்து சுமார் 15 நிமிடங்களுக்கு வேகவிடவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இறுதியாக, கொத்துமல்லித் தூவி இறக்கினால் சுவையான செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் கிரேவி ரெடி..!

You'r reading ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை