ஜிமெயில் செயலி பயனர்களுக்கு ஸ்வைப்பிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு தளத்தில் ஏற்கனவே இருந்து வரும் ஸ்வைப்பிங் வசதி இதுவரை ஐபோனில் இல்லாதிருந்தது.
ஐபோனின் ஐஓஎஸ் தளத்தில் ஆர்க்கைவ் என்னும் காப்பகம், முற்றிலுமாக அழிக்கும் டிரஷ், வாசிக்கப்பட்டது / வாசிக்கப்படாதது என்று குறியிடுவது, ஸ்னூஸ் என்னும் அமர்த்தி வைத்தல் மற்றும் நகர்த்தி வைக்கும் மூவ் டு போன்ற செயல்பாடுகளை விரலால் தேய்த்து (ஸ்வைப்) செய்ய முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
ஐஓஎஸ் தளத்தில் ஜிமெயில் செயலியின் செட்டிங்ஸ் பகுதியினுள் ஸ்வைப் ஆக்சன் என்ற பிரிவில் வலது (ரைட்) மற்றும் லெப்ட் (இடது) என்ற தேய்த்தல் செயல்பாட்டை தெரிவு செய்து கொள்ளலாம்.
அறிவிக்கை என்னும் நோட்டிபிகேஷன் பட்டியிலேயே 3டி டச் என்னும் அழுத்தி தொடும் செயல்பாடு அல்லது நீண்டநேரம் தொடுவதன் மூலம் மின்னஞ்சல்களை குறிப்பிட்ட காலம் வரைக்கும் அமர்த்தி (ஸ்னூஸ்) வைக்க முடியும்.