குழப்பம், தசை வலி, அசதியா? - அலட்சியம் பண்ணாதீர்கள்

Do you feel tired and pain in your muscle? Dont ignore it!

Apr 22, 2019, 09:21 AM IST

'பி காம்ப்ளக்ஸ்' என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். பாமர மக்கள் 'சத்து மாத்திரை' 'சத்து ஊசி' என்று இதை கூறுகிறார்கள். இந்த 'வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்' என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு வைட்டமின்தான், வைட்டமின் பி6.
வைட்டமின் பி6, பைரிடாக்ஸின் என்றும் அழைக்கப்படுகிறது. இது நம் உடல் மற்றும் மனம் சார்ந்த அசைதல், நினைவாற்றல், இரத்த ஓட்டம் போன்ற பல செயல்பாடுகள் நன்றாக நடக்க தேவை. ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம், நரம்பு மற்றும் கல்லீரல் செயல்பாடு, நலமான சருமம் மற்றும் கண் ஆகியவற்றுக்கும் இது அவசியம்.


ஆக்ஸிஜன் என்னும் பிராணவாயுவை சுமந்து செல்லும் இரத்தத்தின் நிறமி அணுக்களான ஹீமோகுளோபின் உருவாதல், உண்ணும் உணவிலிருந்து ஆற்றலை பெறுதல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமச்சீராக பராமரித்தல், இயற்கையான வலி நிவாரணி, உற்சாகமான மனநிலை, உடலின் நோய்எதிர்ப்பு ஆற்றல் ஆகியவைதாம் ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தின் அடிப்படையாகும்.


பைரிடாக்ஸின் குறைபாடு, இதய நோய், மூளை செல்கள் அழிவதால் வரும் அல்சைமர், தசை வலி, மனச்சோர்வு மற்றும் அதிக உடல் அசதி இவற்றுக்கு வழிவகுக்கும்.
ஐம்பதுக்கும் குறைந்த வயதுள்ளோருக்கு நாளொன்றுக்கு 1.3 மில்லிகிராமும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளொன்றுக்கு 1.7 மில்லிகிராமும் வைட்டமின் பி6 தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவிலிருந்து உடல் இதை பெற்றுக்கொள்ள வேண்டும். வைட்டமின் பி6 நீரில் கரையக்கூடியது. ஆகவே, அனுதினமும் இது புதிதாக உடலில் சேர வேண்டும்.


நாம் உண்ணும் உணவிலுள்ள புரதத்தை உடைத்து ஆற்றலை உடல் பெற்றுக்கொள்ள வைட்டமின் பி6 அவசியம். ஆகவே, உடலில் அதிக அசதியை உணர்ந்தால், வைட்டமின் பி6 குறைபாடு இருக்கிறதா என்று சோதித்துக்கொள்ள வேண்டும். உடலின் உறுப்புகளுக்கு மூளையிலிருந்துசெய்தி சென்று சேருவதற்கு வைட்டமின் பி6 தேவை. தசை இயக்கத்தில் குறைபாடு காணப்பட்டாலும் வைட்டமின் பி6 குறைபாட்டினை அறிந்துகொள்ளலாம். அமினோஅமிலம் மற்றும் ஹேமாசிஸ்டெய்ன் ஆகியவை உடலில் அதிகம் காணப்பட்டாலும் வைட்டமின் பி6 குறைபாடு இருக்கிறதா என்று சோதிக்கவேண்டும். அமினோஅமிலம் மற்றும் ஹோமோசிஸ்டெய்ன் குறைபாட்டை நேரடியான அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ள இயலாது. அதற்கு மருத்துவ ஆய்வக பரிசோதனையே வழி. ஹோமோசிஸ்டெய்ன் அதிகமானால் மாரடைப்பு வரக்கூடும்.


மனநிலை அடிக்கடி மாறுபடுதல், மனச்சோர்வு, எரிச்சலுணர்வு, எதிர்காலத்தை குறித்த பயம், மனக்குழப்பம், தசையில் வலி, உடல் அசதி, இரத்த சோகைக்கான அறிகுறிகள், உடல் நடுக்கம், ஒற்றைத் தலைவலி மற்றும் அதிக வலி ஆகியவை வைட்டமின் பி6 என்னும் பைரிடாக்ஸின் குறைபாட்டின் அறிகுறிகளாகும்.


கோழி, வான்கோழி, வாத்து இவற்றின் இறைச்சி, முட்டை, பன்றி இறைச்சி, வேர்க்கடலை, பாதாம், முந்திரி, வாதுமை இவற்றின் கொட்டைகள், பீன்ஸ் என்னும் விதையவரை, கொண்டைக்கடலை, காராமணி போன்ற தாவரங்கள் ஆகியவற்றில் வைட்டமின் பி6 அதிகம் காணப்படுகிறது. இவற்றை போதுமான அளவு சாப்பிடுவதால் மேற்கூறிய குறைபாடுகள் வராமல் தடுக்கலாம்.

சருமம் பளபளவென்று மிளிர வேண்டுமா?

You'r reading குழப்பம், தசை வலி, அசதியா? - அலட்சியம் பண்ணாதீர்கள் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை