30 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகமாகிறது ஸியோமி நிறுவனத்தின் இ-பைக்!

Xiaomis new e-bike has 120km range, 31,000 price tag

by Mari S, Apr 25, 2019, 17:09 PM IST

ஸ்மார்ட்போன்களை தயாரித்து வரும் சீன நிறுவனமான ஸியோமி, தற்போது புதிதாக இ-பைக்கை தயாரித்துள்ளது. 60 முதல் 120 கி.மீ., வேகம் வரை செல்லும் இந்த மின்சார ஸ்கூட்டர் 14mAh லித்தியன் – அயன் பேட்டரி கொண்டு இயங்குகிறது.

ஹீமோ டி1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மின்சார ஸ்கூட்டர் 48வாட்ஸ் வால்டேஜ் மட்டுமே கொண்டு சிறப்பாக செயல்படுகிறது.

எடை குறைவாக உள்ள இந்த மின்சார ஸ்கூட்டரின் விலை 2,999 யுவான்கள் அதாவது இந்திய மதிப்பில் 31 ஆயிரம் ரூபாய் ஆகும்.

53 கிலோ எடையுள்ள ஹீமோ டி1 மின்சார ஸ்கூட்டர் சிகப்பு, வெள்ளை மற்றும் க்ரே நிறங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.

வரும் ஜூன் 4ம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஹீமோ டி1 விரைவில் சர்வதேச நாடுகளில் உள்ள சந்தைகளிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஸ்மார்ட்போனில் பெரியளவில் சர்வதேச சந்தைகளை தன் வசம் வைத்துள்ள ஸியோமி நிறுவனம் மின்னணு ஸ்கூட்டரிலும் புதிய உச்சத்தைத் தொட திட்டமிட்டுள்ளது.

You'r reading 30 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகமாகிறது ஸியோமி நிறுவனத்தின் இ-பைக்! Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை