நல்ல கொழுப்பு எவற்றில் உள்ளது?

Advertisement

கொலஸ்ட்ரால் பிரச்னை: தவிர்க்க வேண்டிய உணவுகள் கொலஸ்ட்ரால் என்பது ஒரு வகை கொழுப்பு. இது இரத்தத்தில் காணப்படுகிறது. ஹார்மோன்களின் உற்பத்திக்கும் சவ்வுகளின் செயல்பாட்டுக்கும் கொலஸ்ட்ரால் அவசியமாகும். கொலஸ்ட்ராலில் 'நன்மை பயப்பது' 'தீமை பயப்பது' என்று இரு வகை உள்ளன.

சரியான உணவினை உட்கொண்டால், உடல், நன்மை செய்யும் கொலஸ்ட்ராலை தானாகவே எடுத்துக்கொள்ளும்.

தீமை பயக்கும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமானால் இதய நோய் மற்றும் மூளை இரத்தக்குழாய்களில் அடைப்பு ஆகியன ஏற்படலாம். கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ள உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்ளலாம்.
முட்டை மஞ்சள் கரு, கோழி இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, விலங்குகளின் ஈரல், இறால், துரித உணவுகள், ஐஸ்கிரீம் போன்றவை கொலஸ்ட்ரால் வகை கொழுப்பை அதிகம் கொண்டவை.

மஞ்சள் கரு: ஒரு மனிதனுக்கு தினசரி தேவைப்படும் கொலஸ்ட்ராலின் அளவைப் போல 411 விழுக்காடு கொலஸ்ட்ரால் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ளது. 100 கிராம் மஞ்சள் கருவில் 1234 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் காணப்படும். ஒரே ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் 210 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. முழு முட்டையில் 212 மில்லி கிராம் மட்டுமே கொலஸ்ட்ரால் உண்டு. அப்போது மஞ்சள் கரு எந்த அளவுக்கு கொலஸ்ட்ராலை உடலுக்குத் தருகிறது என்று அறிந்து கொள்ளலாம்.

கோழி இறைச்சி: வழக்கமாக கோழி இறைச்சி குறைந்த கொலஸ்ட்ரால் வகையிலேயே சேர்க்கப்படும். ஆனால், சமைக்கும் முறையைப் பொறுத்து இது மாறுபடும். லெக் பீஸ் என்ற விரும்பி சாப்பிடும் பகுதியை தோல் நீக்காமல் சமைத்திருந்தால் அதில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருக்கும். தோலோடு சமைக்கப்படும் கோழி இறைச்சி அதிக கொலஸ்ட்ரால் வகையை சேர்ந்தது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி: பதப்படுத்தலின்போது பயன்படுத்தப்படும் முறையைப் பொறுத்து இறைச்சி அதிக கொலஸ்ட்ரால் வகை உணவாகிறது. பதப்படுத்தலின்போது இறைச்சியோடு கொழுப்பு சேர்க்கப்படுகிறது. செம்மறி ஆடு, வாத்து போன்றவற்றின் பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கொலஸ்ட்ரால் அதிகம் காணப்படுகிறது.

விலங்குகளின் ஈரல்: விலங்குகளின் ஈரலில் அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளது. 100 கிராம் அளவு ஈரலில் 564 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது. இது ஒரு மனிதனுக்கு ஒரு நாளுக்குத் தேவைப்படும் கொலஸ்ட்ராலின் அளவை விட 188 விழுக்காடு அதிகமாகும். சமைக்கப்பட்ட மாட்டு ஈரல் ஏறத்தாழ 90 கிராம் (3 அவுன்ஸ்) சாப்பிட்டால் அதன் மூலம் 331 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் நம் உடலில் சேர்கிறது. அமெரிக்க இதய நல கூட்டமைப்பு, நன்கு ஆரோக்கியமான மனிதனே 300 மில்லி கிராம் கொலஸ்ட்ராலுக்கு மேல் சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

இறால்: இறால் பொறியல், இறால் புட்டு என்று நாம் விரும்பிய வகையில் சமைத்து இறாலை உண்கிறோம். பெரும்பாலும் கடல் சார்ந்த மீன் வகைகள் உடலுக்கு நன்மை செய்பவை. ஆனால் இறாலில் மட்டும் அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளது. ஏறத்தாழ 30 கிராம் (1 அவுன்ஸ்) இறால் உணவில் 55 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் காணப்படுகிறது. 100 கிராம் இறால் சாப்பிட்டால் 195 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உடலில் சேர்கிறது. இது ஒரு நாளைக்கு மனிதனுக்கு தேவையான அளவில் 65 விழுக்காடு ஆகும். மீன் போன்ற கடல் உணவுகளை அவித்து சாப்பிடுவது நல்லது. பொறித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

துரித உணவுகள்: துரித உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் அதிக கொலஸ்ட்ராலை தமக்குள் கொண்டிருக்கின்றன. ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட தாவர எண்ணெய்களை பயன்படுத்தி நொறுக்குத் தீனிகள் செய்யப்படுகின்றன.இவ்வகை எண்ணெயில் டிரான்ஸ் கொழுப்பு என்ற வகை கொழுப்பு காணப்படுகிறது. வர்த்தக பயன்பாட்டுக்கென தயாரிக்கப்படும் பண்டங்கள் இவ்வகை எண்ணெயினால் தயாரிக்கப்படுவதால், அவற்றை தவிர்க்க வேண்டும்.

ஐஸ்கிரீம்: ஒரே ஒரு கப் ஐஸ்கிரீமில் ஒரு ஹாம்பர்கரைக் காட்டிலும் அதிக அளவு கொழுப்பு உள்ளது. ஆகவே, ஐஸ்கிரீமை தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக நறுக்கிய பழத்துண்டுகளை சாப்பிடலாம். பழங்களில் கலோரி என்னும் ஆற்றல் குறைவு. மாறாக, நார்ச்சத்து, வைட்டமின்கள், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளனன.

Links:-

இரவில் சாப்பிடுவதற்கு தாமதமா? மாரடைப்பு வருமாம்!

இரவு உணவை தாமதமாக சாப்பிடுகிறவர்களுக்கும் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கும் இதய கோளாறுகள் வரக்கூடும் என்று பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டவர்கள் இந்த விஷயத்தில் அதிக கவனமாக இருக்கவேண்டுமாம். https://tamil.thesubeditor.com/news/health/13076-having-food-late-night-may-result-heart-attack.html

உடல் பருமன், நீரிழிவு குறைபாடுகளை தடுக்கும் பிரெளன் ஃபேட்

'அடிபோஸ் திசு', பழுப்பு கொழுப்பு அல்லது பிரௌன் ஃபேட் என்றும் அழைக்கப்படுகிறது. மனிதர்களின் கழுத்து, கழுத்துப்பட்டை எலும்பு, சிறுநீரகங்கள் மற்றும் முதுகெலும்பு ஆகியவற்றில் காணப்படும் அடிபோஸ் திசுவுக்கு, உடல் பருமன் மற்றும் நீரிழிவு ஆகியவற்றை தடுக்கும் பண்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். https://tamil.thesubeditor.com/news/health/15849-is-brown-fat-good-for-your-health.html

இப்படி செய்தால் போதும் கொலஸ்ட்ரால் குறைஞ்சுபோகும்!

மருத்துவ உலகில் 'கொலஸ்ட்ரால்' மிகவும் பயத்திற்குரிய வார்த்தையாகவே பார்க்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது, உடல் எடையில் பிரச்னையை கொண்டு வருவது, உடலில் இரத்த ஓட்டம் குறைவதற்குக் காரணமாகி, நெஞ்சு வலி, வயிற்று வலி போன்ற உடல் நல கோளாறுகளை ஏற்படுத்துவது, செரிமான பாதையில் பித்த கற்கள் உருவாக்குவது மற்றும் இதய நோயை கொண்டுவருவது என பல ஆரோக்கிய கேட்டுக்கு கொலஸ்ட்ரால் காரணமாகிறது. https://tamil.thesubeditor.com/news/health/15769-how-to-lower-your-cholesterol-level.html

ஃபிட்னஸ் பற்றிய தவறான நம்பிக்கைகள் எவை தெரியுமா?

தசை, கொழுப்பு இரண்டுமே வெவ்வேறு வகை திசுக்கள். அவை இரண்டும் ஒன்று மற்றொன்றாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. உடற்பயிற்சி செய்வதை நீங்கள் நிறுத்திவிட்டால், உங்கள் கொழுப்பு செல்களின் அளவு பெரிதாகும். தசைநார்கள் சுருங்கிவிடும். ஆகவே, உடல் தொளதொளப்பாக தோற்றமளிக்கும்.
கொழுப்பை காட்டிலும் தசைக்கு கூடுதல் எடை உண்டா? https://tamil.thesubeditor.com/news/lifestyle/15931-stop-believing-this-myths-about-fitness.html

இடுப்புச் சதை குறைய என்ன செய்யலாம்?

'பிளாங்' (Planks) எனப்படும் உடற்பயிற்சி, இடுப்பில் இருக்கும் அதிகப்படியான சதையை குறைத்து அழகான தோற்றத்தை பெற உதவும். கைகளையும் கால் விரல்களையும் தரையில் ஊன்றியபடி இப்பயிற்சியை செய்ய வேண்டும். ஏறத்தாழ சதுரங்க தண்டாசனம் மற்றும் கும்பகாசனத்தை போன்று இருக்கும் இப்பயிற்சியை சிலர் முழங்கை வரைக்குமான பாகத்தை ஊன்றியும் செய்வர். https://tamil.thesubeditor.com/news/health/15673-how-to-reduce-excess-fat-at-the-side-of-waistline.html

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?
/body>