சிலரின் முகம் வெண்மையில் மலரும்..ஆனால் அவர்களின் அழகை சற்று குறைப்பது போல் உதடுகள் கருமையாக இருக்கும்.இதற்கு கெமிக்கல் எல்லாம் பயன்படுத்த தேவையில்லை நம் இயற்கை வழியாகவே சரிசெய்துவிடலாம்..முகம் எப்படி வெண்மையில் ஜொலிக்கிறதோ உதடும் ரோஜா மலரின் இதழ்கள் போல இளஞ்சிவப்பு நிறமாக மாற சில குறிப்புகளை காணலாம்..
எலுமிச்சையின் நன்மை:-
தினமும் காலையில் எலுமிச்சை பழத்தின் சாறை உதட்டில் தேய்க்க வேண்டும்.அல்லது எலுமிச்சை பழத்தை சிறு துண்டுகளாக எடுத்து அதில் சர்க்கரையை வைத்து உதட்டில் தேய்க்க வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் உதட்டில் உள்ள கருமை நீங்கி உதடு மென்மையாக இருக்கும்.
ரோஸ் வாட்டரின் நன்மை:-
ஒரு கிண்ணத்தில் ரோஸ் வாட்டர்,தேன் கலந்து ஒரு நாளைக்கு 3 முறை உதட்டில் மேல் தேய்த்து வர வேண்டும்.ரோஜா இதழை அரைத்து அதில் வெண்ணெய்,தேன் போன்றவற்றை கலந்து உதட்டில் இட வேண்டும்.இதனை தினமும் 2 முறை செய்து வந்தால் உதடு அழகாக மாறி விடும்..
மாதுளையின் நன்மை:-
ஒரு பாத்திரத்தில் மாதுளை சாறு,கேரட் சாறு,பீட்ரூட் சாறு என மூன்றிலும் 3 ஸ்பூன் எடுத்து கொண்டு உதட்டில் தேய்க்க வேண்டும்.மற்றும் மாதுளையின் விதைகளை அரைத்து உதட்டில் தேய்த்து வந்தால் அழுக்கு செல்கள் முழுமையாக அழித்து உதடு அழகாக மாறும்..