கேரளா மாநிலம் எப்பொழுதும் பசுமையாக காணப்படும்.அங்கு அடிக்கடி மழை பொழிவதால் மரங்கள்,செடிகள்,கொடிகள் என பல வகையானவை பச்சை பசேலென்று விளங்கும்.தண்ணீருக்கு பஞ்சமே இல்லாத மாநிலம் என்றால் அது கேரளா தான்..கேரளா என்றால் வயசு பசங்க மனதில் அழகான பெண்கள் என்று தான் நினைவிற்கு எட்டும்.அவர்கள் பெரும்பாலும் அதிக கூந்தல்,கொழு கொழு கண்ணங்கள்,குழிகள் விழும் சிரிப்பு,வெள்ளையான சருமம் போன்ற தோற்றங்களில் இருந்தாலே அவர்கள் கேரளாவை சார்ந்தவர்கள் என்று சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.
பாதாம் ஆயிலின் பயன்பாடு:-
கேரளாவில் உள்ள பெண்கள் பெரும்பாலும் பாதாம் ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் போன்றவையை பயன்படுத்துவார்கள். இதனை தினமும் இரண்டு வேளையில் தொடர்ந்து முகத்தில் மசாஜ் செய்து வந்தால் முகம் பொலிவாக இருக்கும்.சருமம் எப்பொழுதும் இளமையாக இருக்கும்.. இதுவும் கேரளா பெண்கள் அழகாக இருக்க ஒரு முக்கிய காரணமாகும்..
கும்குமடி தைலம்:-
டாஷ்மூலா,ஆட்டு பால்,நல்லெண்ணெய் ஆகிய மூன்று கலவைகள் தான் கும்குமடி தைலம்.இது மிகவும் சருமத்திற்கு நல்லது.முகத்தில் உள்ள தழும்புகள், பருக்கள்,போன்றவற்றை முழுவதுமாக போக்கி விடும்.இதனையும் தவறாமல் தினமும் பயன்படுத்த வேண்டும்.தினமும் 2-3 சொட்டுகள் போதுமானது..இதனால் சரும நிறமும் மாறும்.ஒரே வாரத்தில் சருமத்தில் அதிகம் மாற்றத்தை உணரலாம்..
கண்ணுக்கு அழகு கண் மை:-
பெண்களுக்கு அழகு அவர்களின் கண்களே!!இதனை மேலும் அழகு சேர்க்கும் விதமாக கண் மையை இடுவார்கள்.கேரளா பெண்கள் கண்களில் மை அதிகமாகவே காணப்படும்.பெரும்பாலும் கேரளா வாசிகள் இயற்கையில் தயாரான கண் மை தான் பயன்படுத்துவார்களாம்...