பழைய சோறு முதல் பிரியாணி வரை ஊறுகாய்க்கு சூப்பரான காம்பினேஷன்.அதுவும் தயிர் சாதத்துக்கு ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் சுவை அள்ளும்.. ஊறுகாயில் அதிக வகைகள் உண்டு. அதில் மிகவும் பிரபலமானவை என்றால் மாங்காய் மற்றும் எலுமிச்சையால் ஆன ஊறுகாய் தான். பார்த்தாலே நாக்கு ஊரும் வண்ணம் எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-
எலுமிச்சை பழம் -தேவையான அளவு
எண்ணெய் - 1 கப்
கடுகு -2 ஸ்பூன்
பெருங்காயம் -தேவையான அளவு
வெந்தயம் - 2 ஸ்பூன்
மிளகாய் பொடி- தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
செய்முறை:-
முதலில் எலுமிச்சை பழத்தை சிறிது சிறிது துண்டாக நறுக்கி கொள்ளவும்.அடுப்பில் கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடான பிறகு அதில் கடுகு, பெருங்காயத் தூள், நறுக்கிய எலுமிச்சை பழம் ஆகியவை சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.
அடுப்பில் இன்னொரு கடாயை வைத்து அதில் கடுகு மற்றும் வெந்தயத்தை வறுத்து கொள்ளவும்.பிறகு வறுத்த கலவையை மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
எலுமிச்சை பழத்தில் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் 10-15 நிமிடம் வேகா வைக்கவும்.பிறகு காரத்திற்கு தேவையான மிளகாய் தூளை சேர்த்து நன்றாக கிளறி விடவும். கிளறி விட்ட பின் பொடித்து வைத்த வெந்தய பொடியை எலுமிச்சை ஊறுகாயில் சேர்த்து சமமாக கலக்கி வேண்டும்.
10 நிமிடம் பச்சைவாசனை போகும் வரை கிளறுங்கள்.அடுத்து அடுப்பை அணைத்து விடுங்கள். தயார் செய்த ஊறுகாயை காற்று போகாத ஜாடியில் அடைத்து விடுங்கள்.
பழைய சோறு, ரொட்டி ஆகியவைக்கு எலுமிச்சை ஊறுகாயை வைத்து சாப்பிட்டால் கலக்கல் டேஸ்ட் ஆக இருக்கும்.. அதனின் சுவை நாவை விட்டு நீங்கள் நெடுநேரம் இருக்கும்..