ஆண்கள்,பெண்கள் என இருவருக்குமே இளநரை பிரச்சனை உண்டாகும்.இதனால் வயதில் முதிர்ந்தவர்கள் போல் தோற்றமளிப்பதால் செயற்கையான கலர் முதலியவற்றை பயன்படுத்தி உடல் ஆரோக்கியம்,முடியின் வலிமை தன்மை ஆகியவை கெடுத்து கொள்கின்றனர்.இளநரையை சரி செய்ய இயற்கை பொருளான நெல்லி கனி மிகவும் உதவுகிறது.முடி,சருமம்,உடல் ஆகிய மூன்றுக்கும் ஆரோக்கிய பாலமாய் நெல்லி கனி பயன்படுகிறது.இதனை பொடியாக தயாரித்து பயன்படுத்தி வந்தால் 10 வயது குறைந்து காணப்படுவீர்கள்.சரி வாங்க இளநரையை குறைக்க உதவும் நெல்லி கனி பேஸ்ட் செய்வது குறித்து பார்க்கலாம்..
நெல்லி கனியின் பொடியை தயாரிக்கும் முறை:-
நெல்லிக்காயில் உள்ள கொட்டையை எடுத்துவிட்டு சிறிது துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.பின்பு அதனை நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும்.நெல்லிக்காய் நன்கு சுருங்கியவுடன் மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
இதனை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் இளநரையை முழுவதுமாக கட்டுப்படுத்தும்.
இதனில் விட்டமின் சி சத்து உள்ளதால் நெல்லி கனியை ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம்.
நெல்லி எண்ணெய் தயாரிக்கும் முறை:-
நெல்லி கனியை நறுக்கி சுத்தமான தேங்காய் எண்ணையில் சேர்த்து ஒரு வாரம் வெயிலில் வைக்க வேண்டும்.அவ்வாறு செய்தால் நெல்லி கனியின் சத்து எண்ணையில் இறங்கும்.இதனை ஒரு நாள் விட்டு முடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் இளநரையை கட்டுப்படுத்தும்..