வீட்டிலே மாம்பழ பேஷியல் செய்வது எப்படி?? உடனடி தீர்வு.. மிஸ் பண்ணிடாதீங்க..

by Logeswari, Jan 8, 2021, 20:22 PM IST

வெயில் காலத்தில் உடம்பு குளிர்ச்சியாக இருக்க மாம்பழத்தை சாப்பிடுவார்கள். அதனின் சுவை நாவை விட்டு நீங்காது. மாம்பழம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள். சரி.. மாம்பழத்தை யாவரும் சாப்பிட்டு தான் பார்த்து இருக்கிறோம். ஆனால் மாம்பழத்தில் முகத்தை வெண்மையாக்கும் தன்மை உள்ளது. ஆமாம், வாங்க எப்படி மாம்பழத்தில் ஃபேஸ் பேக் செய்வது என்று பார்ப்போம்.

மாம்பழத்தில் உள்ள சதையை எடுத்து முகத்தில் 2 நிமிடம் தேய்த்து கொள்ளவும். பிறகு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகத்தின் நிறம் வெண்மையாக மாறும். இதனின் உடனடி தீர்வுக்கு மாம்பழத்தை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தவும்.

மாம்பழத்துடன் கடலை மாவு:-
ஒரு கிண்ணத்தில் மாம்பழ சதை, 2 ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் தேன் போன்றவற்றை கலந்து கொள்ள வேண்டும். பிறகு கலந்த கலவையை முகத்தில் போட்டு 20 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் மிதமான நீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

மாம்பழத்துடன் தயிர்:-
ஒரு கிண்ணத்தில் மாம்பழம், 3 ஸ்பூன் தயிர், 2 ஸ்பூன் தேன் சேர்த்து திக்காக கலந்து கொள்ள வேண்டும். அடுத்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைக்கவும். இது முகத்திற்கு குளிர்ச்சி தருவதால் முகம் மென்மையாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் சருமத்தை உடையவருக்கு உதவியாக இருக்கும்.

More Aval News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்