குரூப்-1 தேர்வுக்கான உத்தேச விடையை வெளியிட்டது TNPSC!

by Loganathan, Jan 8, 2021, 20:20 PM IST

குரூப்-1 முதல்நிலை தேர்வு-கீ ஆன்சர் வெளியீடு-ஏதேனும் Objection இருப்பின் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), போலீஸ் டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் 66 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுகடந்த 3-ம் தேதி நடத்தப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் எழுதினர். இந்நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி நேற்று இரவு இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டது. அதில் ஏதேனும் ஆட்சேபம் (Objection) இருப்பின் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பதாரர்கள், ஜன.14-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்த விடை குறிப்பில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை சுட்டிக்காட்ட தேர்வாணையம் நேரம் அளித்துள்ளது. மேலும் இந்த குரூப்-1 தேர்வுக்கான உத்தேச விடை குறிப்பு மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/PDF-Instructions-to-Challenge-the-Answer-Keys-(1).pdf

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்