மஞ்சளை சமையலில் பயன்படுத்தாத குடும்பம் இருக்க முடியாது. மஞ்சள் பல்வேறு கை வைத்தியங்களிலும் முக்கியமானதாகும். அடிபட்ட இடங்களில் மஞ்சளையும் பச்சரியையும் அரைத்து நீரில் கொதிக்கவைத்து பூசுவது வழக்கம். மஞ்கள் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியது. மஞ்சளின் சில மருத்துவகுணங்கள் இதோ...
ஒற்றைத் தலைவலி
'மைக்ரேன்' என்னும் ஒற்றைத் தலைவலியை அற்புதவிதமாக போக்கும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது.
முகப்பரு
முகத்தில் இருக்கும் பருக்கள் அகலாமல் அடம் பிடிக்கிறதா? மஞ்சளை அரைத்து ஃபேஸ்மாஸ்க் போன்று பூசினால் அகல மறுக்கும் பருக்கள் அகன்றுபோகும். அவற்றை குணப்படுத்தக்கூடிய தன்மை மஞ்சளுக்கு உண்டு. ஆம், பாக்டீரியாக்களுக்கு எதிராகவும், அழற்சி ஏற்படாமல் தடுக்கவும் மிகவும் உதவுவது மஞ்சள்.
சர்க்கரை நோய்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கும் தன்மை மஞ்சளுக்கு இருக்கிறது. அழற்சியை தடுக்கும் குணம் இதற்கு உதவுகிறது.
மாதவிடாய்
பிஎம்எஸ் என்னும் ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம், மாதவிடாய்க்கு முன்பான உபாதையின் தீவிரத்தை குறைப்பதற்கு மஞ்சள் உதவுகிறது.
வயிற்று கோளாறு
ஐபிஎஸ் என்னும் இரிடபிள் பௌவல் சிண்ட்ரோம் அல்லது வயிற்று கோளாறுகள் ஏற்படாமல் மஞ்சள் தடுக்கிறது. 207 பேரிடம் செய்த ஆய்வு மூலம் அடிவயிற்று வலி உள்ளிட்ட பல்வேறு வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படாமல் மஞ்சள் தடுப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று
சாதாரண சளி மற்றும் ஃப்ளூ என்று அழைக்கப்படும் தொற்று இவற்றை கொண்டு வரும் பல்வேறு வகை கிருமிகளுக்கு (வைரஸ்) எதிராக மஞ்சள் செயல்படும் திறன் கொண்டது.
புற்றுநோய்
உங்கள் உடலிலுள்ள நச்சுப்பொருள்களை அகற்றி, கட்டியை ஏற்படுத்தும் செல்கள் (tumor cells) வளருவதை மஞ்சள் தடுக்கிறது.
கெட்ட கொலஸ்ட்ரால்
மஞ்சளை தொடர்ந்து உணவில் உட்கொண்டு வந்தால் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கப்படுகிறது. எச்எல்டி என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு உடலில் அதிகரிக்க மஞ்சள் உதவுகிறது.
முடக்குவாதம்
மூட்டுவலி, மூட்டு மடங்காத விறைப்பு மற்றும் முடக்குவாதம் இவற்றை குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது. ஆகவே, மூட்டு பிரச்னை உள்ளவர்கள் மஞ்சளை பயன்படுத்தி பலன் பெறலாம்.