பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிக சோர்வாக விளங்குவார்கள். எந்த வேலை செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு அது பெரிய டாஸ்க்காக இருக்கும். முதுகு வலி, வயிறு வலி போன்றவை அவர்களை பயங்கரமாக எரிச்சல் படுத்தும். இருப்பினும் வீட்டு வேலை, ஆபிஸ் வேலை என இரண்டையும் சமாளிக்கும் திறன் பெண்களுக்கு உண்டு. மாதவிடாய் காலத்தில் சிலர் வெந்நீர் ஒத்தடம், சூடாக டீ, காபி குடித்தல், ஜூஸ் குடித்தல் போன்றவை மேற்கொள்ளுவார்கள். பகலில் பெண்கள் வயிற்று வலியை ஈசியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் இரவில் தூங்கும் பொழுது தாங்க முடியாத வலி இருக்கும். இதை நாம் எளிதாக எதிர்கொள்ளலாம். நாம் தூங்கும் பொசிஷனை மாற்றினால் மற்றும் போதுமானது.. சரி வாங்க எப்படி தூங்குவது குறித்து பார்க்கலாம்.
உடலை குறுக்கி தூங்குதல்:-
பெண்களின் வயிற்றில் குழந்தை இருந்தால் ஒரு பக்கம் திரும்பி கால்களை குறுக்கி தூங்குவார்கள். அதுபோல தூங்கினால் வயிறு வலி இருந்த அடையாளமே காணாமல் போய்விடும். இப்படி தூங்கும் பொழுது இரத்த ஓட்டம் சற்று குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் வலி கம்மியாக தான் இருக்கும். இது போல செய்தால் உடல் ஓய்வில் இருப்பதை நன்றாக உணரலாம்.
இடுப்பில் தலையணையை முட்டு கொடுத்தல்:-
மாதவிடாய் காலத்தில் இடுப்பில் பயங்கரமாக வலி இருக்கும். அப்பொழுது தலையணை போன்ற மெது மெதுப்பானவையை இடுப்பில் முட்டு கொடுத்து தூங்கினால் வலி மறந்து சுகமாய் இருக்கும். மற்ற நாட்களில் கூட இந்த டிப்ஸ் பின்பற்றலாம். இப்படி செய்வதன் மூலம் தூக்கத்தை மேம்படுத்தும். இடுப்பிற்கு மட்டும் இல்லாமல் கால்களுக்கும் தலையணை வைத்து படுத்தால் வலி குறையும். எடை அதிகம் உள்ளவை மற்றும் பெரிய தலையணையை பயன்படுத்த கூடாது. வட்ட வடிவம் என்றால் சரியாக இருக்கும்.
இந்த வழிகளை பின்பற்றினால் இரவில் அமைதியான தூக்கத்தை பெறுவீர்கள். தேவை இல்லாத வலி எல்லாம் மறைந்துவிடும். இதை சரியாக செய்து மாதவிடாய் காலத்தை ஈசியாக, சந்தோஷமாக கடந்து வாருங்கள்.