பிள்ளைகளின் ஆரோக்கியமான ஆன்லைன் வாழ்க்கை - ஃபேஸ்புக்கின் ஆலோசனைகள்

'வீட்டிலிருந்து பாடம்' - கொரோனாவின் புண்ணியத்தால் எல்லா வீடுகளிலும் உள்ள சிறுபிள்ளைகள் கைகளில் வழக்கத்திற்கு மாறாகக் கூடுதல் நேரம் செல்போன்கள் இருக்கின்றன. ஆன்லைன் வகுப்புகளைக் காரணம் காட்டி பெரும்பாலான நேரத்தைப் பிள்ளைகள் செல்போனுடனே கழிக்கிறார்கள்.கொரோனா போன்ற பெருந்தொற்றினால் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டபோதிலும், அதன் தாக்கத்தைப் பெருமளவு குறைத்தது இணையமே. ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஓரளவுக்குப் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தினால் அதனால் நாம் பல நன்மைகளைப் பெற இயலும்.ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பகுதி, பாதுகாப்பு தலைமை பொறுப்பில் இருக்கும் ஆம்பர் ஹாக்ஸ், ஆன்லைன் உலகில் பெற்றோர் பிள்ளைகளை எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்து சில ஆலோசனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.மாறிக்கொண்டே இருக்கும் ஆன்லைன் உலகத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பைக் கவனிப்பது சவாலான ஒன்று. ஆனால் நாம் அவர்களோடு உரையாடுவது, அவர்களோடு தொடர்பில் இருக்க வாய்ப்பாக அமையும்.

ஆன்லைன் ஆபத்து

அறிமுகமில்லாத நபர் ஆபத்துக்கு உரியவர், சாலைகளைக் கடப்பது போன்று நாம் பொதுவாகக் கூறும் பாதுகாப்புகளைப் போன்றே சிறிய வயதாக இருக்கும்போதே பிள்ளைகளிடம் ஆன்லைன் உலகத்திற்கான பாதுகாப்பு முறைகளைக் குறித்துப் பேச வேண்டும்.இப்போது பிள்ளைகள் பிறக்கும்போதிலிருந்தே, பெற்றோர் பயன்படுத்தும் சாதனங்களைப் பார்க்கிறார்கள். ஆகவே, கூடிய அளவு சீக்கிரமாகவே அவர்களிடம் இது குறித்து உரையாட ஆரம்பிக்கவேண்டும். எந்த ஒரு சாதனமாக இருக்கட்டும்; இணையமாக இருக்கட்டும்; அது பொறுப்புடன் பயன்படுத்தப்படவேண்டியது என்பதைப் பிள்ளைகள் புரிந்துகொள்ளும்படி செய்யவேண்டும். ஏனெனில் மற்றவர்களைக் காட்டிலும் இளம்பிள்ளைகளை ஆன்லைன் உலகம் பாதிக்கக்கூடிய வாய்ப்பு அதிகம்.

சிறுவர்களுக்கான தனி கட்டுப்பாடுகள்

வழக்கமான தனியுரிமை, பாதுகாப்பு அம்சங்களைத் தாண்டி சிறார்கள் பாதுகாக்கக் கூடுதல் அம்சங்கள் ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் உள்ளன. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த குறைந்தது 13 வயதாகியிருக்கவேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வயதைத் தாண்டியவர் மட்டுமே ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்கினை தொடங்க இயலும். சில நாடுகளில் இந்த வயது வரம்பு அதிகமாகவும் உள்ளது. பெரியவர்களைக் காட்டிலும் பதின்ம வயதினருக்கு எங்கள் கட்டுப்பாடுகள் சற்று கடுமையாகவே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஃபேஸ்புக்கில் நண்பர் அல்லது நண்பரின் நண்பர் அல்லாத சிறாருக்குப் பெரியவர் ஒருவர் அனுப்பும் செய்தி, அந்த சிறுவரின் இன்பாக்ஸுக்கு செல்லாமல் நேரடியாக ஸ்பேம் ஃபோல்டருக்கு சென்று விடும். ஃபேஸ்புக்கின் பெற்றோருக்கான தளம் மற்றும் இன்ஸ்டாகிராமின் பெற்றோருக்கான வழிகாட்டி, பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்குத் தேவையான விவரங்களையும், செயலி எப்படி செயல்படுகிறது என்ற தகவலையும் கொண்டிருக்கிறது. உங்கள் பிள்ளையிடம் எப்படி பேசுவது என்பது குறித்து வல்லுநர்களின் ஆலோசனையும் அவற்றில் உள்ளன.

பெற்றோருக்கான ஆலோசனைகள்:டிஜிட்டல் உலகில் ஈடுபாடு

உங்கள் பிள்ளை ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடும்போது நீங்களும் உடன் இருங்கள். உங்கள் பதின்ம வயது மகன் அல்லது மகள் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் பயன்படுத்தினால் அதில் நண்பர்களைச் சேர்ப்பது மற்றும் பின்தொடர்வது குறித்து உரையாடுங்கள். அவர்கள் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள்; எவற்றை பகிர்ந்துகொள்கிறார்கள் என்பது குறித்து அடிக்கடி அவர்களுடன் பேசுங்கள். ஆன்லைன் உலகில் ஏதாவது விரும்பத்தகாதது நடந்தால் உங்களிடம் தைரியமாக வரலாம் என்ற நம்பிக்கையைப் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டும்.

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு வசதிகளைப் பயன்படுத்துதல்

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்ஜர் ஆகியவற்றில் எவற்றைப் பகிர்ந்துகொள்கிறோம்; யாருடன் பகிர்ந்து கொள்கிறோம்; எவற்றை பார்க்கிறோம்; யார் நம்மைத் தொடர்புகொள்ள முடியும் போன்ற பல கட்டுப்பாடுகளைச் செய்ய முடியும். பெரும்பாலும் சிறுவர்களுக்கு இவை அனைத்தும் தாமாகவே கட்டுப்படுத்தப்படும். ஆனாலும், குறித்த கால இடைவெளியில் நீங்கள் உங்கள் பிள்ளையின் கணக்கில் தனியுரிமை மற்றும் காப்புரிமை செட்டிங்ஸை சோதிக்கவேண்டும்.

குடும்பத்திற்கான விதிகள்

குடும்பமாக, செல்போன் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவது, இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து ஒருமித்த முடிவு எடுக்கவேண்டும். அதை மீறினால் என்ன விளைவு என்பதையும் வரையறுக்கவேண்டும். உங்கள் பிள்ளையின் வயதுக்கு ஏற்ப, சமூக ஊடகங்களால் வரக்கூடிய பாதிப்புகள், சட்டச் சிக்கல் உள்ளிட்ட தீவிர பின்விளைவுகளையும் பேச வேண்டும். பதிவுகளின் உள்ளடக்கம் குறித்தும் பேச வேண்டும்.

எடுத்துக்காட்டாய் இருங்கள்

இரவு 8 மணிக்குப் பிறகு எதையும் பார்க்கக்கூடாது; படுக்கையறையில் எந்த சாதனத்தையும் கொண்டு போகக்கூடாது என்பது போன்ற விதிகளை உருவாக்கி அவற்றை நீங்கள் சரியாக கடைப்பிடித்து பிள்ளைக்கு மாதிரியாக இருக்க வேண்டும்.பிள்ளைகளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் .தொழில்நுட்பம் வேகமாக முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இளம் பிள்ளைகள் அதை வேகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். உங்கள் பிள்ளை புதிய ஒரு செயலியை (App)பயன்படுத்தினால், அது எப்படிச் செயல்படுகிறது என்பதை உங்களுக்குக் காட்டும்படி கேட்கலாம். உங்கள் பிள்ளை ஆன்லைனில் என்ன செய்கிறான்(ள்) என்பதை அறிந்துகொள்ள மட்டுமல்ல, ஆன்லைன் உலகின் பாதுகாப்பு குறித்துப் பேசவும் அது ஒரு வாய்ப்பாக அமையும். குறிப்பிட்ட அந்த புதிய செயலியின் தனியுரிமை, பாதுகாப்பு குறித்து நீங்களும் தேடி அறிந்துகொள்ளவேண்டும்.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்

READ MORE ABOUT :