சர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப்பை இந்தியர்களே அதிகமாக பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இன்றைய தலைமுறை இளைஞர்கள் புத்தகம் கையுமாக இருக்கிறார்களோ இல்லையோ வாட்ஸ் அப் கையுமாக தான் இருக்கிறார்கள். இது உண்மையே..! என்று சர்வதேச அளவில் எடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஆம், மொபைலில் வாட்ஸ் அப் மூலம் தகவல்களை பரிமாறி கொள்வதில் இந்தியர்களே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த 2017ம் ஆண்டில் இந்தியர்கள் 98 சதவீதம் பேர் மொபைல் வாட்ஸ் அப் செயலியையும், 2 சதவீதம் பேர் பேஸ்புக் மெசன்ஞ்சரையும் பயன்படுத்துகிறார்கள் என்றும் இவற்றில் தான் தகவல்களை பரிமாற்றம் செய்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதன்மூலம், சர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்டதில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
குறிப்பாக, வாட்ஸ் அப்பில் சுமார் 89 சதவீதம் பேர் மொபைல் வாட்ஸ் அப்பிலும், 11 சதவீதம் பேர் கணினி வாட்ஸ் அப்பையும் பயன்படுத்துகிறார்களாம். இந்தியாவை தொடர்ந்து, இரண்டாவதாக 87 சதவீதம் பேர் இந்தோனேஷியாவும், 80 சதவீதம் புள்ளிகள் பெற்று மெக்சிகோ மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
மேலும், அடுத்தடுத்த இடங்களில் அர்ஜென்டினா, மலேசியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுப்பதாக புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.