மோட்டோ நிறுவனம் மோட்டோ ஜி60 மற்றும் மோட்டோ ஜி40 ஃப்யூஷன் ஆகிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனின் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 27ம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஆரம்பிக்கும். மோட்டோ ஜி40 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் விற்பனை மே 1ம் தேதி நண்பகல் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட் தளத்தில் ஆரம்பிக்கும். ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
சிம்: இரட்டை நானோ சிம்
தொடுதிரை: 6.8 அங்குலம் எஃப்எச்டி+
இயக்கவேகம்: 6 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி (ஹைபிரிட் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1 டிபி வரை உயர்த்தலாம்)
செல்ஃபி காமிரா: 32 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 108 எம்பி + 8 எம்பி + 2 எம்பி (டிரிப்பிள் ரியர் காமிரா)
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 732ஜி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
மின்கலம்: 6000 mAh
ப்ளூடூத் 5.0, 3.5மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 ஏசி, என்எஃப்சி, பின்புறம் விரல்ரேகை உணரியுடன் கூடிய 6ஜிபி+128ஜிபி சாதனம் ரூ.17,999/- விலையில் கிடைக்கும்.
மோட்டோ ஜி40 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
தொடுதிரை: 6.8 அங்குலம்
இயக்கவேகம்: 4 ஜிபி மற்றும் 6 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி (ஹைபிரிட் மைக்ரோ எஸ்டி மூலம் 1 டிபி வரை உயர்த்தலாம்)
செல்ஃபி காமிரா: 16 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி (டிரிப்பிள் ரியர் காமிரா)
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 732ஜி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
மின்கலம்: 6000 mAh
ப்ளூடூத் 5.0, 3.5மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 ஏசி, என்எஃப்சி, பின்புறம் விரல்ரேகை உணரியுடன் 4ஜிபி+64ஜிபி சாதனம் ரூ.13,999/- விலையிலும் 6ஜிபி+128ஜிபி சாதனம் ரூ.15,999/- விலையிலும் கிடைக்கும்.