ரெட்மி கே40 மற்றும் ரெட்மி கே40 ப்ரோ+ ஆகிய ஸ்மார்ட்போன்களின் மாற்றப்பட்ட வடிவங்களாக ஸோமியின் மி 11எக்ஸ் மற்றும் மி11எக்ஸ் ப்ரோ ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை பின்புறம் மூன்று காமிராக்களை (டிரிப்பிள் காமிரா)கொண்டுள்ளன. இவற்றுள் மி 11 எக்ஸ் ப்ரோ போனின் விற்பனை தொடங்கியுள்ளது.
மி 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.67 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2400 பிக்ஸல்)
ரெப்ஃரஷ் விகிதாச்சாரம்: 120 Hz
எஸ்ஜிஎஸ் கண் பாதுகாப்பு சான்றிதழ் பெற்றது.
இயக்கவேகம்: 8 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி மற்றும் 256 ஜிபி
செல்ஃபி காமிரா: 20 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 108 எம்பி + 8 எம்பி + 5 எம்பி ஆற்றல் கொண்ட மூன்று காமிராக்கள்
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 888
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
மின்கலம்: 4250 mAh
பாஸ்ட் சார்ஜிங்: 33 W
5 ஜி தொழில்நுட்பம், டூயல் பேண்ட் வைஃபை, வைஃபை 6இ, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், NavIC சப்போர்ட், யூஎஸ்பி டைப் சி போர்ட், புளூடூத் வி 5.2
மி 11 எக்ஸ் ப்ரோ சாதனத்தில் 8 ஜிபி + 128 ஜிபி வகை மாதிரி ரூ.39,990/- விலையிலும் 8 ஜிபி + 256 ஜிபி மாதிரி ரூ.41,999/- விலையிலும் விற்பனையாகிறது.