டெலிகாம் துறையில் ஜியோவின் வருகைக்குப் பின்னர் மற்ற செல்போன் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களைக் கவர ஆஃபர் மேல் ஆஃபர்களை அள்ளித் தெளிப்பதே முக்கியக் குறிக்கோளாக உள்ளது.
ஜியோ ஆஃபர்களுக்குப் போட்டியாக ஏர்டெல் சமீபத்தில் பல ஆஃபர்களை வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்துத் தற்போது வோடஃபோன் நிறுவனமும் களத்தில் குதித்துள்ளது.
ஜியோ போலவே 399 ரூபாய்க்கான ஆஃபர்களை வோடஃபோன் அறிவித்துள்ளது. இது முன்னரே வோடஃபோன் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் வோடஃபோன் ரெட் என்ற புதியத் திட்டத்துக்கு மாற நினைப்பவர்களுக்கான ஆஃபர் ஆக உள்ளது.
மேலும், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக ஃவோடபோன் 349 ருபாய்க்கு ஒரு நாளுக்கு 3ஜிபி விகிதம் 28 நாள்கள் வேலிடிட்டி கொண்ட ஒரு புதிய ஆந்பரை அறிவித்துள்ளது. இதில் ஜியோ திட்டத்தில் போல் இலவச அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்-கள் என கலர்புல் ஆஃபர்கள் வழக்கம்போல் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், 511 ரூபாய் ஆஃபர் திட்டத்தில் 84 நாள்களுக்கு நாள் ஒன்றுக்கு 2ஜிபி விகிதம் டேட்டா உடன் கூடிய சூபர் ஃவோடபோன் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.