டெலிகாம் துறையில் ஜியோவின் வருகைக்குப் பின்னர் மற்ற செல்போன் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களைக் கவர பலவாறு முயற்சித்து வருகின்றனர்.
`இன்டர்நெட் வசதி எல்லோருக்கும் கிடைக்கும் வகையிலும் குறைந்த விலையில் கிடைக்கும் நோக்கிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்ற அறிமுகத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் களம் இறங்கியது ரிலையன்ஸ் ஜியோ.
ஜியோவுக்குப் போட்டியா மற்ற செல்போன் நிறுவனங்கள் கடுமையா அதிரடி ஆஃபர்களை அறிவித்தாலும் ஜியோவை நெருங்கவே முடியவில்லை. யார் எவ்வளவு ஆஃபர் அளித்தாலும் அவற்றை தூக்கி சாப்பிடுவது போல் அமைகிறது அடுத்து வெளியாகும் ஜியோவின் சலுகைகள்.
இந்நிலையில், புதிதாக ஜியோ ஒரு சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது, 199 ரூபாய்க்கு மாதம் 25 ஜிபி டேட்டா கிடைக்கும் வகையில் ஒரு ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 15-ம் தேதி முதல் இந்த ஆஃபர் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
இது போஸ்ட்பெய்டு ப்ளான் என்பது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அதிர்ச்சியை தந்தாலும் மொபைல் டேட்டா, இன்டெர்நெட், வெளிநாட்டு போன்கால், எஸ்.எம்.எஸ் என அனைத்து வசதிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.