கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப்ஸ்-க்கு புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்ப்ளோர் மற்றும் யூர் மேட்ச் என்ற சொல்லப்படும் இரண்டு அப்டேட்களை கூகுள் வெளியிட்டுள்ளது.
இதில் இரண்டு அப்டேட்களும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு வரும். அதே நேரத்தில், ஆப்பிள் நிறுவன போன்களுக்கு எக்ஸ்ப்ளோர் அப்டேட் மட்டுமே வரும்.
எக்ஸ்ப்ளோர் ஆப்ஷன் மூலம், கூகுள் மேப்ஸில் தேடப்படும் இடங்களில் இருக்கும் உணவகங்கள் மற்றும் பிற இடங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும். மேலும், குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து புகைப்படம் மற்றும் விளக்கங்களுடன் பயனருக்குத் தெரிவிக்கப்படும்.
அதிலும் குறிப்பாக விலை குறைந்த இடம், குழந்தைகளுக்கு ஏற்ற இடம் போன்ற தரவுகளும் கொடுக்கப்படும். மேலும், குறிபிட்ட இடத்தில் ட்ரெண்டிங்காக இருக்கும் விஷயங்கள் பற்றியும் இந்த ஆப்ஷன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
யூர் மேட்ச் மூலம், பலகட்ட தரவுகள் சேமிப்பின் மூலம் உங்கள் விருப்பத்திற்குரிய இடங்கள் குறித்து தெரிவிக்கப்படும்.