வெயிலால் உங்க சருமம் கருமையாகிவிட்டதா?

Advertisement

சூரியனின் கதிர்கள் அளவுக்கு அதிகமாக சருமத்தைத் தாக்கும் போது, சருமத்தின் நிறம் கருமையாகிவிடுகிறது. கருமையை போக்க கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்தில் பயன்படுத்த வேண்டுமெனில் பலமுறை யோசிக்க வேண்டும். ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்தில் மாஸ்க் போட்டால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

எலுமிச்சை சாறு மற்றும் தேன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும்.

கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் இந்த ஃபேஸ் பேக், வெயிலால் ஏற்பட்ட கருமையை குறைப்பதோடு, பொலிவை அதிகரிக்கும். அதற்கு 4 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா இந்த முறை கூட முகத்தில் உள்ள கருமையைப் போக்கும். அதற்கு பேக்கிங் சோடாவை ரோஸ் வாட்டரில் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

ஓட்ஸ் இது ஒரு நேச்சுரல் ஸ்கரப்பர். இந்த ஸ்கரப் செய்வதற்கு சிறிது ஓட்ஸ் உடன், பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின் முகத்தைக் கழுவிய பிறகு, வைட்டமின் ஈ ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து விட வேண்டும்.

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு எலுமிச்சை ஓரு சிறப்பான ப்ளீச்சிங் தன்மை வாய்ந்த பொருள். அந்த எலுமிச்சையின் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, குளிக்கும் போது இந்த கலவையைக் கொண்டு சருமத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமைகள் அகலும்.

வெள்ளரிக்காய் சரும கருமையை நீக்க உதவும். அதற்கு வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும்.

கற்றாழை ஜெல் கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால், சருமத்தில் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் நீங்குவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-do-facial-at-home
பெண்களின் அழகை மேம்படுத்த சில டிப்ஸ்.. இதை செய்தால் முகம் ஜொலிக்குமாம்..!
what-are-the-secrets-of-beauty
அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது?? நீங்களே சொல்லுங்கள்
what-are-the-benefits-of-using-honey
தேனில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் என்ன??
secret-of-kerala-girls
கேரளா பெண்களின் அழகு சீக்ரெட்.. இதை செய்தால் முகம் பளபளப்பாக இருக்குமாம்..
how-to-sleep-at-menstrual-cycle-time
எப்படி தூங்கினால் வலி இருக்காது தெரியுமா?? மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உதவும் சில டிப்ஸ்..
how-to-cure-hair-loss
முடி உதிர்வை தடுக்க ஒரு இன்ஸ்டன்ட் டிப்ஸ்.. இப்படி செஞ்சு பாருங்க அசந்துடுவிங்க..!
how-to-loss-weight-after-delivery
பெண்கள் குழந்தை பெற்ற பிறகு குண்டாக காரணம் என்ன?? மீண்டும் பழைய நிலைக்கு மாறுவது எவ்வாறு??
how-to-choose-lipstick
லிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?? வாங்க பார்க்கலாம்..
how-to-cure-wrinkles-with-orange-face-mask
முகம் 20 வயது போல மின்ன வேண்டுமா.. ஆரஞ்சு பவுடர் தான் பெஸ்ட்.. ஆண்களும் பயன்படுத்தலாம்..
how-to-escape-from-stomach-pain
பெண்கள் கார்னர்.. வயிற்று வலியில் இருந்து தப்பிக்க வேண்டுமா?? அப்போ இதை செய்யுங்கள்..

READ MORE ABOUT :

/body>