டீன் ஏஜ் பெண்களுக்கான வளையல் ஐடியாக்கள்

ideas About bangles for teenagers

by Vijayarevathy N, Oct 9, 2018, 22:05 PM IST

கலர், கலராய் ஆடைகள், வண்ண, வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே, வளையல்கள் அணியும் போது, அதற்கென சில விதிமுறைகள் உண்டு. அது தவறும் போது, அழகை குறைத்து விடவும் கூடும்.

முதலாவது உங்களிடம் வண்ண, வண்ண வளையல்கள், பல டிசைன்களில் இருக்கிறதா? வளையல்களை டெட்டாலில் நனைத்து, பெட்டியிலே பாதுகாப்பாக வையுங்கள். இதனால், உங்கள் கைகளை, அலர்ஜியிலிருந்து பாதுகாக்கலாம். பொருளின் உபயோகக் காலமும் கூடும். அடுத்து, நாம் அணியும் ஆடைகளுக்கு, பொருத்தமான வளையல்களைத் தெரிவு செய்ய வேண்டும்.

உதாரணம், கண்ணாடி, ஸ்டீல், பிளாஸ்டிக் என ஏராளம். நாம் புடவை அணியும் சந்தர்ப்பங்களில், கை நிறைய வளையல்களை அணியலாம். சுடிதார் அணியும் பெண்கள், அளவாக வளையல் போடலாம். ஜீன்ஸ் அணியும் பட்சத்தில், ஓரிரு வளையல்களை போட்டால், எடுப்பாக இருக்கும்.

நாம் அணியும் ஆடைகளில் எத்தனை வர்ணங்கள் உள்ளதோ, அத்தனை வர்ணத்திலும், ஒவ்வொரு வளையல் தெரிவு செய்து அணியும் போது, அது அழகாகக் காட்சி தரும்.

விசேஷங்களுக்கு அணியும் வளையல்கள், கொஞ்சம் மினுமினுப்பாக இருந்தால் அழகாய் இருக்கும். கற்கள் பதித்த வளையல்கள், பட்டுச் சேலைக்கு பொருத்தமாய் இருக்கும். எப்படியும், ஒற்றை வளையல் அணியும் போது, விரல்களுக்கு மோதிரங்களை குறைத்துப் போட வேண்டும். குட்டையான பெண்கள், தங்க வளையல் அணிவதாக இருந்தால், பட்டையான அமைப்புடன் கூடிய வளையல்களாக இருந்தால், குறைந்தது, நான்கு வளையல்கள் அணிந்தால் நன்றாக இருக்கும்.

 உயரமானப் பெண்கள், பட்டையான வளையல்கள் அணிந்தால் நன்றாக இருக்காது. இவர்கள், இரண்டு மெல்லிய வளையல்கள் அணிந்தால் நன்றாக இருக்கும்.

இந்த வளையல் குறிப்பு கண்டிப்பாக உங்களை அழகுப்படுத்தவும் சரியான வளையலைத் தேர்ந்தெடுக்கவும் உதவும்.

You'r reading டீன் ஏஜ் பெண்களுக்கான வளையல் ஐடியாக்கள் Originally posted on The Subeditor Tamil

More Aval News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை