இன்றைய ராசிபலன்கள் (10.10.2018)

இன்றைய ராசிபலன்கள்

by Vijayarevathy N, Oct 10, 2018, 07:42 AM IST

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Horoscope

மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் புரிந்துகொள்வர். திட்டமிட்ட சுப காரியம் சிறப்பாக நடக்கும். உறவினர்கள் வழியில் சில அலைச்சல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்கள் புரியவரும்.

ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, பணப்பற்றாக்குறையை எதிர்கொள்ள முடியும். குடும்பத்திற்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். தொழில், வியாபாரம் செழிக்கும்.

மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் மங்கள் நிகழ்வு உண்டாகும். வேண்டியவர்களிடம் அனுசரித்து போகவும். வெளிவட்டாரத்தில் நல்ல மரியாதை இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

கடகம்:
கடக ராசி நேயர்களே, நீங்கள் எதார்த்தமாக பேசும் தன்மை கொண்டவர். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். கடனில் ஒரு பாதியை அடைக்க முடியும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிடைக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் பயணங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணையிடம் வாக்குவாதங்கள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.

கன்னி:
கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் எதிர்பார்க்கும் மரியாதை கிடைக்கும். சிக்கலான விஷயத்தை கூட திறமையாக செய்து முடிக்க முடியும். பழைய நண்பர்களின் எதிர்பாராத

துலாம்:
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் முக்கிய பொறுப்புகள் தரப்படும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசவும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்கள் வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த ஆபர்ண பொருட்களை வாங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

தனுசு:
தனுசு ராசி நேயர்களே, எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வரும். பண வரவு கூடும். உத்யோகத்தில் சவால்கள் நிறைந்து இருக்கும்.

மகரம்:
மகர ராசி அன்பர்களே, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் புதிய பாதையில் செல்லும்.

கும்பம்:
கும்ப ராசி, நேயர்களே, வாக்கு வன்மை கூடும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு.

மீனம்:
மீன ராசி நேயர்களே, காதல் கைகூடி திருமணத்தில் முடியும். மனதில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். நெருக்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிறைய நன்மைகள் உண்டு.

You'r reading இன்றைய ராசிபலன்கள் (10.10.2018) Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை