முழங்கால், கையில் உள்ள கருமைப் போக்க அழகு குறிப்புகள்

Removing sun tan from legs hands

Oct 22, 2018, 19:45 PM IST

அறைகுறையான அழகு யாருக்குத்தான் பிடிக்கும். கருப்பு என்றால் முழுவதும் கருப்பாக தோற்றமளிக்க வேண்டும். வெள்ளை என்றால் முழுமையாக வெள்ளையாக இருத்தல் வேண்டும். பாதி வெள்ளை பாதி கருப்பாக இருந்தால் யாருக்குத்தான் பிடிக்கும். சரி எவ்வளவோ முயற்சி செய்தும் பயனில்லை என்பவர்களுக்கு தான் இந்த குறிப்புகள்.

பெண்கள் உடலை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் அவர்கள் முகம், கை, கால் போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முழங்கைகளுக்கும், கால்களுக்கும் கொடுப்பதில்லை.

சிலருக்கு முகம், கை, கால்கள் கலராக இருக்கும். ஆனால் முழங்கை கருப்பாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் அந்த இடத்திற்கு முறையான பராமரிப்பு தருவதில்லை. இத்தகைய கருப்பை நீக்க சில வழிகள் இருக்கிறது.ஒரு கரண்டி மஞ்சள் தூளுடன் மூன்று கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து தண்ணீர் விட்டு அரைத்து, முழங்கையில் தடவி 30 நிமிடம் ஊற வைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரால் அதனை துடைத்து எடுத்து விட வேண்டும். இதனை தினமும் குளிப்பதற்கு முன் செய்தால், முழங்கையில் இருக்கும் கருப்பு நீங்கிவிடும்.

100 கிராம் காய்ந்த துளசி இலையை பொடி செய்து, அத்துடன் 1 கரண்டி வேப்ப எண்ணெய், 1 கரண்டி பன்னிர் மற்றும் அரைத்த புதினா இலை சேர்த்து பசை செய்து, முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

தினமும் கடுகு எண்ணெய் வைத்து 15 நிமிடம் முழங்கையில் தேய்த்த பிறகு கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அந்த இடத்தில் உள்ள அழுக்கானது படிப்படியாக போய்விடும்.

தேங்காய் எண்ணெயுடன் சிறிது தேனை விட்டு, எலுமிச்சை தோல் வைத்து முழங்கையில் 20 நிமிடம் தேய்த்த பின் துணியால் துடைத்து எடுக்கவும். இதனால் அந்த இடத்தில் இருக்கும் அழுக்கானது நீங்கிவிடும்.

மேற்கூறிய அனைத்தையும் முழுங்கைக்கு மட்டும் பயன்படுத்தாமல், கழுத்து, கணுக்கால் போன்ற இடங்களிலும் பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவதால் முழங்கை, கால், கழுத்து போன்ற இடங்களில் உள்ள கருமை நிறம் நீங்கும்.

You'r reading முழங்கால், கையில் உள்ள கருமைப் போக்க அழகு குறிப்புகள் Originally posted on The Subeditor Tamil

More Aval News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை