ட்விட்டரின் அதிகாரபூர்வ பக்கத்தில் ஒரு எழுத்து கூட இல்லாமல் போடப்பட்ட ட்விட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதே போல் பலர் முயற்சி செய்து ஒரு எழுத்து கூட இல்லாமல் ட்விட் செய்து சாதித்து காட்டி வருகின்றனர்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்ஆப் வரிசையில் ட்விட்டரும் ஒன்று. அரசியல் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், சாதரண மக்கள் என ட்விட்டர் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆரம்பத்தில் ட்விட்டரில் 140 எழுத்துக்கள் மட்டுமே ட்வீட் செய்ய முடியும். இதனால் சிலர் தங்கள் கருத்துக்களை முழுமையாக தெரிவிக்க முடியாமல் போனது. அதன்பின் 280 எழுத்துக்கள் வரை ட்வீட் செய்யும் வசதி கிடைத்தது.
மேலும் ட்வீட் செய்வதற்கு ஒரு எழுத்தாவது இருக்க வேண்டும் இல்லையெனில் ட்வீட் செய்ய முடியாது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் தன்னுடைய அதிகாரபூர்வ பக்கத்தில் ஒரு எழுத்து கூட இல்லாமல் ட்வீட் ஒன்றை செய்திருக்கிறது. அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதைப் பார்த்து ஒருவர் 2018-ம் ஆண்டில் நான் சாதித்தது இதுதான் என எழுத்தில்லாமல் ட்வீட் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மற்றொருவர் நான் எப்போது மெசெஜ் செய்தாலும் என் மனதுக்கு நெருக்கமானவள் இப்படிதான் எதையும் சொல்லமாட்டாள் என்பது போல பதிவிட்டிருந்தார்.
இதுபோல் பலரும் பல நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.