மீடூ யூடூ இயக்கங்கள் பெண்களை அடிமைப்படுத்தும்- தமிழிசை

Me too you too movements Enslave women-tamizhisai Soundarajan

by Manjula, Oct 18, 2018, 21:13 PM IST

மீடூ யூடூ (Me too, You too) போன்ற இயக்கங்கள் எல்லாம் பெண்களை அடிமைப்படுத்தும் முயற்சி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவர் ஆயுதபூஜை கொண்டாடினர். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய தமிழிசை, மீடூ (Me too) விவகாரத்தில் அக்பர் வழக்கு தொடர்ந்திருப்பதாகக் குறிப்பிட்ட தமிழிசை, கவிஞர் வைரமுத்துவுக்கு அந்த துணிச்சல் இல்லை என்று விமர்சித்தார்.

மீடூ (MeToo) என்ற பிரசாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ''பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது. தனி மனித ஒழுங்கீனங்களை செய்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும் உரிய விசாரணைக்கு பின் உறுதி செய்யப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும்'' என தமிழக பாஜக தலைவர் தமிழிசை ட்விட்டரில் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

You'r reading மீடூ யூடூ இயக்கங்கள் பெண்களை அடிமைப்படுத்தும்- தமிழிசை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை