பாஸ்தா விரும்பிகளே.. உங்களுக்காக இன்னைக்கு மஷ்ரூம் பாஸ்தா ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாஸ்தா - 100 கிராம்
வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மஷ்ரூம் - 6
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2 பல்
பட்டாணி - கால் கப்
சோளம் - கால் கப்
குடை மிளாகய் - பாதி
பால் - அரை லிட்டர்
துருவிய சீஸ் - கால் கப்
துளசி இலை - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் துகள் - கால் டீஸ்பூன்
மிளகு - சிறிதளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்ததும் உப்பு மற்றும் பாஸ்தா சேர்த்து 15 நிமிடங்கள் கேவ வைத்து வடிகட்டி 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து ஒரு பக்கம் வைக்கவும்.
ஒரு வாணலியில், வெண்ணெய் போட்டு உருகியதும், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்னர், மஷ்ரூம், பச்சைப் பட்டாணி, சோளம், குடை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
மற்றொரு வாணலியில், வெண்ணெய் போட்டு உருகியதும், மைதா சேர்த்து நன்றாக கிளறவும்.
மைதாவின் பச்சை வாசம் போனதும், பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
பால் கெட்டியானதும், துருவிய சீஸ், வேக வைத்த காய்கள் மற்றும் பாஸ்தா சேர்த்து நன்றாக கிளறவும்.
இறுதியாக, துளசி இலை, காய்ந்த மிளகாய் துகள்கள், மிளகு, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான மஷ்ரூம் பாஸ்தா ரெசிபி ரெடி..!