சோள மாவு அல்வா ரெசிபி

Corn Flour Halwa Recipe

by Isaivaani, Apr 8, 2019, 20:35 PM IST

சோள மாவைக் கொண்டு ருசியான அல்வா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சோள மாவு - அரை கப்

சர்க்கரை - ஒன்றரை கப்

ஃபுட் கலர் - கால் சிட்டிகை

ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி

நெய் - 3 தேக்கரண்டி

முந்திரி - 12

செய்முறை:

முதலில், ஒரு பாத்திரத்தில் சோள மாவு, சர்க்கரை, ஃபுட் கலர், ஏலக்காய் தூள், தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த கலவையில் கட்டி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நெய்விட்டு சூடானதும், கலவையை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

இந்த கலவை கொஞ்சம் கெட்டியாக மாற ஆரம்பிக்கும். அப்போது, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி சேர்த்து கிளறவும்.

கலவை நன்றாக வெந்து அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கி, ஒரு தட்டில் நெய் தடவி அதில் கொட்டி சமப்படுத்தவும். அல்வா ஆறியதும் துண்டுகள் போட்டு பறிமாறவும்.

அவ்ளோதாங்க.. சுவையான சோள மாவு அல்வா ரெடி..!

You'r reading சோள மாவு அல்வா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை