உடலுக்கு மிகவும் சத்து தரும் ராகி புட்டு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - ஒரு கப்
நெய் அல்லது வெண்ணெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
வெல்லம்
கருப்பட்டி
செய்முறை:
முதலில், ஒரு வாணலியில் ராகி மாவு போட்டு மிதமான சூட்டில் வறுக்கவும்.
இடையே, நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து கிளறிவிடவும்.
பிறகு, வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டி இல்லாமல் கிளறவும்.
அத்துடன், ஏலக்காயத்தூள் சேர்த்து கிளறி இறக்கி ஆறவிட்டு பிசையவும்.
பின்னர், இட்லி தட்டில் ஈரத்துணி போட்டு அதன்மீது ராகி மாவு பரப்பி போட்டு வேக வைக்கவும்.
இதற்கிடையே, கருப்பட்டி, வெல்லம் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி பாகு தயாரித்து வடிகட்டவும்.
ராகி மாவு வெந்ததும் ஒரு கிண்ணத்தில் கொட்டி, அத்துடன் வெல்லப்பாகு, தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறவும்.
சுவையான ராகி புட்டு சாப்பிட ரெடி..!