ஸ்பைசி இறால் மஞ்சூரியன் ரெசிபி

Spicy Prawn Manchurian Recipes

by Isaivaani, Jun 8, 2019, 15:32 PM IST

அசத்தலான சுவையில் இறால் மஞ்சூரியன் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

இறால் - 500 கிராம்

சோள மாவு - ஒரு கப்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

குடை மிளகாய் - அரை கப்

நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்

ஸ்ப்ரிங் ஆனியன் - அரை கப்

இஞ்சி - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

பூண்டு - ஒரு டீஸ்பூன்

சோயா சாஸ் - அரை டீஸ்பூன்

தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்

சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்

கரம் மசாலா - அரை டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த இறாலை போட்டுக் கொள்ளவும்.
அதில், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சோள மாவு சேர்த்து நன்றாக கிளறி சுமார் 15 நிவீடங்களுக்கு மசாலா ஊறவிடவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், மசாலா கலவையில் உள்ள இறாவை போட்டு வறுத்து எடுக்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு & இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

தற்போது வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்னர், தக்காளி சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறவும். கூடவே, கரம் மசாலா, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

இறுதியாக, பொரித்து வைத்த இறால் சேர்த்து நன்றாக கிளறவும். மிதமான சூட்டில் சுமார் பத்து நிவீடங்கள் வேக வைத்து நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன், குடை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான இறால் சஞ்சூரியன் ரெடி..!

You'r reading ஸ்பைசி இறால் மஞ்சூரியன் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை