சுவையான இறால் ஃபிரைட் ரைஸ் ரெசிபி

சுவையான இறால் ஃபிரைட் ரைஸ் ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - ஒரு கப்

இறால் - 300 கிராம்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்

நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்

நறுக்கிய கேரட் - கால் கப்

நறுக்கிய முட்டை கோஸ் - கால் கப்

நறுக்கிய குடைமிளகாய் - கால் கப்

முட்டை - 2

சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

ஸ்ப்ரிங் ஆனியன் - கால் கப்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் இறாலை சுத்தம் செய்து ஒரு கிண்ணத்தில் போட்டு அத்துடன், மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஊற வைக்கவும்.

பாஸ்மதி அரிசியை கழுவி சுமார் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கூடவே, எண்ணெய், எலுமிச்சை சாறு, உப்பு சேர்க்கவும்.

பின்னர், பாஸ்மதி அரிசியை சேர்த்து 90 சதவீதம் வேகவிட்டு எடுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் இறாலை போட்டு வறுத்து எடுக்கவும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, இஞ்சி, ஸ்ப்ரிங் ஆனியன், கேரட், குடை மிளகாய், முட்டை கோஸ் சேர்த்து வதக்கவும்.

முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறிவிடவும். கூடவே, சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு சேர்த்து கிளறவும்.

காய்கள் நன்றாக வதங்கியதும் வறுத்தி இறாலை சேர்க்கவும்.

பிறகு, வடித்த சாதத்தை சேர்த்து உடையாமல் கிளறி சுடச்சுட பரிமாறவும்.

அவ்ளோதாங்க.. சுவையான இறால் ஃபிரைட் ரைஸ் ரெடி..!

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??