குழந்தைகள் விரும்பு பருகும் கேசார் லஸ்ஸி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
தயிர் - ஒரு கப்
பால் - அரை கப்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - ஒன்று
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் கெட்டியான தயிர், ஏலக்காய் விதை சேர்க்கவும்.
கொஞ்சம் பாலில் குங்குமப்பூ சேர்த்து கலந்து தயிருடன் சேர்க்கவும்.
அத்துடன், முழுமையான கொழுப்புள்ள பால், சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
இதனை கொஞ்சம் நேரம் ஃபிரிட்ஜ்ஜில் வைத்து பிறகு பரிமாறலாம்.
பரிமாறும்போது, ஒரு தம்ளரில் ஊற்றி அதன் மீது, பொடியாக நறுக்கிய வறுத்த முந்திரி, பாதம் போட்டுக் கொடுத்தால் அசத்தலாக இருக்கும்.
சாப்பிடுபவை சரியாக செரிமானம் ஆகவில்லையா? இவையெல்லாம் உதவும்!