வீட்டிலேயே செய்யலாம் பீச் பட்டாணி கிரேவி சுண்டல்

Home made beach peas sundal snack

Aug 22, 2020, 18:46 PM IST

மக்களே.. அடிக்கடி கடற்கரைக்கு போறவங்க கண்டிப்பா பட்டாணி சுண்டலை மிஸ் பண்ணாம சாப்பிட்டுதான் வருவீங்க.. ஆனா இந்த லாக்டவுன்ல கடற்கரையையும், பட்டாணி சுண்டலையும் கண்டிப்பா மிஸ் பண்ணிருப்பீங்க.. கவலையைவிடுங்க.. வீட்டிலேயே அட்டகாசமா பீச் பட்டாணி கிரேவி சுண்டல் ஈசியா செய்து சாப்பிடலாம்..

செய்முறை:

பட்டாணி - 200 கிராம்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - ஒன்று

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

வெறும் மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி

கரம் மசாலா - கால் தேக்கரண்டி

குழம்பு மிளகாய்த்துள் - -1 தேக்கரண்டி

கடுகு - கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை

கொத்தமல்லித்தழை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

பட்டாணியை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

மிக்ஸியில் பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின், வெறும் மிளகாய்த்தூள், குழம்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.

மசாலாக்களின் பச்சை வாசனை போனதும், வேகவைத்த பட்டாணியை சேர்த்து கலந்து கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.

இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பரிமாறும்போது பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்,

சுவையான பீச் பட்டாணி கிரேவி சுண்டல் தயார்.

You'r reading வீட்டிலேயே செய்யலாம் பீச் பட்டாணி கிரேவி சுண்டல் Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை