சூடான பாலக் பன்னீர் சுவைக்க தயாரா??

How to cook palak panner in tamil

by Logeswari, Aug 26, 2020, 15:38 PM IST

பாலக் பன்னீர் மிகவும் புகழ் பெற்ற உணவு பண்டமாக மக்களின் மனதில் நின்றுவருகின்றது.இதனை வடமாநிலங்களில் உள்ள மக்கள் அரிசி மற்றும் ரொட்டியுடன் சேர்த்து உண்டு வருகின்றனர்.இவ்வகையான உணவை குழந்தைகளும் மிகவும் விரும்பி உண்பார்கள்.இதில் விட்டமின் போன்ற ஊட்டசத்தும் கிடைக்கின்றது.சுத்தமான பசுமையான கீரையுடன் பாலாடைகட்டியை கொண்டு காரசாரமாக தயாரித்து வருகின்றனர்.வாங்க பாலக் பன்னீரை எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்...

தேவையான பொருள்கள்:-

கீரை - 200 கிராம்

தண்ணீர் - 1 கப்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1 கப்

தக்காளி - 1 கப்

பச்சை மிளகாய் - 1 டீ ஸ்பூன்

முழு முந்திரி பருப்பு - 4

உப்பு - 1 டீ ஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்

ப்ரஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்

அலங்கரிக்க பன்னீர் துண்டுகள் - 1 கப்

செய்முறை:-

முதலில் கீரையை தண்ணீரில் அலசி எடுத்து கொள்ளவும்.பிறகு குக்கரில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் கீரையை சேர்த்து வேகவைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் தக்காளி,பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.இதனை மிக்சியில் நன்கு வழுவழுப்பாய் அரைத்து கொள்ளவும்.

குக்கரில் வேகவைத்த கீரையையும் மிக்சியில் மைய அரைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் அரைத்து வைத்த மசாலா மற்றும் கீரையை கலந்து பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்கவைக்க வேண்டும்.கடைசியில் நறுக்கிய பன்னீரை அலங்கரித்து சூடாக பரிமாறவும்,

காரசாரமான பன்னீர் பாலக்கை சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சுவைத்து பாருங்கள்...

You'r reading சூடான பாலக் பன்னீர் சுவைக்க தயாரா?? Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை