மாலை நேர சூப்பர் ஸ்னாக்ஸ் கோதுமை சமோசா..

Advertisement

மாலை நேர சூப்பர் ஸ்னாக்ஸ் கோதுமை சமோசா.. வீட்டுல திடீர்னு விருந்து வந்துட்டாங்களா ? அவங்களுக்கு ஸ்பெஷலா ஸ்னாக்ஸ் செஞ்சி கொடுக்க ஆசைப்படுறீங்களா ? இதோ இருக்கு சூப்பர் ரெசிபி கோதுமை சமோசா.. சரி கோதுமை சமோசா எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - அரை கிலோ
முட்டைகோஸ் - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
பட்டாணி - 50 கிராம்
பட்டை - 1
இலவங்கம் - 2
மஞ்சள்தூள் - அரைத்தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
புதினா - ஒரு கட்டு
பச்சைமிளகாய் - 8
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புதினா, பச்சை மிளகாய் இரண்டையும் மிக்ஸியில் நைசாக அரைக்கவும். முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட் மற்றும் உருளைகிழங்கினையும் சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கோதுமை மாவை நன்கு சலித்துக் கொண்டு, அதனுடன் சிறிது உப்பு, எண்ணெய் அரைத்த விழுது சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். முப்பது நிமிடம் ஆன பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போட்டுக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்கம், வேக வைத்த காய்கறிகள், மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு நேர்த்து மசாலா செய்து கொள்ளவும். சப்பாத்தியின் நடுவில் இந்த கலவையை வைத்து, இரண்டு புறமும் சிறிது நீரை தொட்டு ஒட்டி விடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் சமோசாவைப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். அவ்ளோதான்.. கோதுமை சமோசா தயார்..

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>