திருநெல்வேலி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது

திருநெல்வேலியில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரியில் மார்ச் 22ம் தேதி தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டு பரிசுகளை வென்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், மருதகுளம் பகுதியில் அமைந்துள்ளது நேஷனல் பொறியியல் கல்லூரி. இங்கு, பொறியியல் தொடர்பான பல்வேறு துறைககளின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கல்வி மற்றும் கலை தொடர்பான நிகழ்ச்சிகள் அவ்வபோது கல்லூரி சார்பில் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மார்ச் மாதம் தொடக்கத்தில், கணினி அறிவியல் (CSE) துறை சார்பில் “மேம்பட்ட கணினி தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள்” என்ற தலைப்பின் கீழ் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெறுவது தொடர்பாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, மார்ச் 22ம் தேதி தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.

காலை, 10.15 மணியளவில் கருத்தரங்கு தொடங்கியது. இந்த கருத்தரங்கில், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஏஐசிடிஇ அனுமதி பெற்ற கல்லூரிகள் மற்றும் யுஜிசி அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, இந்த கருத்தரங்கில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு, கட்டுரைகளை எடுத்துரைத்தனர். கட்டுரை எடுத்துரைத்தல் பிரிவின் கீழ் மட்டும் 30 மாணவர்கள் கலந்துக்கொண்டனர். மேலும், மதியம் 2 மணிக்கு மேல் நடத்தப்பட்ட போஸ்டர் ப்ரெசென்ட்டேஷனில் 40 மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

மாலை வரை நடந்த இந்த கருத்தரங்கில், நேஷனல் பொறியியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் டாக்டர் ஏ.எம்.ஷானவாஸ் தலைமை விருந்தினராக கலந்துக்கொண்டார். உடன், கணினி அறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் எம்.எம்.கொதுல் ஆலம் இருந்தார். 

கருத்தரங்கின் இறுதியில், போஸ்டர் ப்ரெசென்ட்டேஷனில் சிறப்பாக நடத்திய நான்கு மாணவர்களுக்கு நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகள் பெற்ற மாணவர்களின் விவரம்: திருச்செந்தூர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த நூர் பாஸிலா, திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர் கே.பி.ராஜ கோபாலன் மற்றும் எஸ்.கண்ணன், நேஷனல் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் எஸ்.முகமது அசாருதீன், அதே கல்லூரியை சேர்ந்த எம்.ஆபிரின், கே.பத்மாவதி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இறுதியாக, டாக்டர் என்.நாராயணன் பிரசாந்த் நன்றியுரை வழங்கி கருத்தரங்கை முடித்து வைத்தார்.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!