வெயிலுக்கு இதமான மசாலா மோர் ரெசிபி

அடிக்கிற வெயிலுக்கு இதமா மசாலா மோர் ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

தயிர் - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 2

இஞ்சி - ஒரு துண்டு

சீரகம் - ஒரு சிட்டிகை

பெருங்காயம் - 2 சிட்டிகை

வெள்ளரிப்பிஞ்சி

கறிவேப்பிலை

கொத்தமல்லித்தழை

உப்பு

செய்முறை:

முதலில், மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம், உப்பு, தயிர் இரண்டு கரண்டி சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு, மற்றொரு முறை தயிர் முழுவதும் ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
இதனை வடிகட்டியப்பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

மோரை ஒரு தம்ளரில் ஊற்றி பொடியாக நறுக்கிய வெள்ளரிப்பிஞ்சு, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

தாகம் தணியும் மசாலா மோர் ரெடி..!

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
Advertisement
மேலும் செய்திகள்
Healthy-Green-Lentils-salad-Recipe
சத்தான முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் ரெசிபி
Tasty-Chicken-Brocolli-Fry-recipe
ருசியான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் ரெசிபி
Methi-Leaf-Masala-Chappathi-Recipe
வெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி ரெசிபி
Tasty-Cream-Bun-Recipe
புதுவிதமான சுவையில் கிரீம் பண் ரெசிபி
Tasty-Non-veg-Favourite-Goat-Brain-Fry-Recipe
அசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ஆட்டு மூளை வறுவல் ரெசிபி
Yummy-Sago-Laddu-Recipe
சுலபமா செய்யலாம் ஜவ்வரிசி லட்டு ரெசிபி
Tasty-Chettinad-Crab-Curry-Recipe
கமகமக்கும் சூப்பரான செட்டிநாடு நண்டு குழம்பு ரெசிபி
Tasty-Sweet-Rava-Puttu-Recipe
சுவையான ஸ்வீட் ரவை புட்டு ரெசிபி
Yummy-Chicken-Macroni-Recipe
அட்டகாசமான சுவையில் சிக்கன் மாக்ரோனி ரெசிபி
Tasty-Besan-Burfi-Recipe
சுலபமா செய்யலாம் கடலை மாவு பர்பி ரெசிபி
Tag Clouds