ஆரோக்கியம் நிறைந்த காராமணி சுண்டல் ரெசிபி

Healthy Cow Peas Sundal Recipe

by Isaivaani, Jul 12, 2019, 18:51 PM IST

உடலுக்கு மிகவும் சத்துத் தரக்கூடிய காராமணி சுண்டல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

காராமணி - ஒரு கப்

தனியா - ஒரு டீஸ்பூன்

கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

உளுந்து - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் காராமணியை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர், அதில் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

இதனை குக்கரில் போட்டு தண்ணீர், உப்பு சேர்த்து சுமார் 5 விசில்விட்டு வேக வைத்து எடுக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், தனியா, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காய்த்தூள் சேர்த்து தாளித்து அதனுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கிளறவும்.

அத்துடன், தேங்காய் துருவல், வேக வைத்த காராமணி, உப்பு சேர்த்து கிளறவும்.

அதில் உள்ள தண்ணீர் வற்றும்வரை கிளறி இறக்கவும்.

சுவையான மற்றும் சத்து நிறைந்த காராமணி சுண்டல் ரெடி..!

சட்டென செய்யலாம் ரவா ஸ்வீட் ரெசிபி

You'r reading ஆரோக்கியம் நிறைந்த காராமணி சுண்டல் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை