சுரைக்காய் பொரியல் சரி..அது என்ன சுரைக்காய் பாயசம்??

by Logeswari, Sep 4, 2020, 19:01 PM IST

நாம் எல்லாரும் சுரைக்காயில் பொரியல் உண்டு இருக்கோம் ஆனால் அது என்ன சுரைக்காய் பாயசம்??வாங்க எப்படி செய்ய வேண்டும் என்று ரெசிபிக்குள்ளே போகலாம்..

தேவையான பொருள்கள்:-

பால்-1 லீட்டர்

துருவிய சுரைக்காய்-1 கப்

சர்க்கரை-1/4 கப்

நெய்-1 ஸ்பூன்

ஏலக்காய் பொடி-தேவையான அளவு

பாதாம்-தேவையான அளவு

பிஸ்தா-தேவையான அளவு

செய்முறை:-

கடாயில் நெய் ஊற்ற வேண்டும்.நெய் சூடானதும் அதில் துருவிய சுரைக்காயை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.

வேற பாத்திரத்தில் பாலை திக்காக காய்ச்சிகொள்ள வேண்டும்.அதில் தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து கிளறி விடவும்.

பிறகு வதக்கிய சுரைக்காயை பாலில் ஊற்றி ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.

கடைசியில் பாதாம் பருப்பு,பிஸ்தா பருப்பு ஆகியை சேர்த்து இறக்கி விட வேண்டும்.

சூடான... சுவையான... ஆரோக்கியமான... சுரைக்காய் பாயசம் ரெடி...


More Ruchi corner News

அதிகம் படித்தவை