விசேஷ காலத்தில் இனிப்பான பாயாசத்தை இறைவனுக்கு வழிபாடு செய்வது வழக்கம். சேமியா பால் பாயாசத்தை விட பாசி பருப்பு பாயாசத்தை தான் அனைவரும் விரும்புவார்கள்.இதில் வெல்லம் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.இதில் வெண்மையான சர்க்கரையை சேர்க்காததால் பாசி பருப்பு பாயாசத்தை நீரிழிவு நோய் உடையவர்களும் எந்த வித தயக்கமும் இன்றி சாப்பிடலாம்.சரி வாங்க சுவையான பாயாசத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:-
பாசி பருப்பு-1 கப்
வெல்லம்-1 கப்
நெய்-2 ஸ்பூன்
தேங்காய் பால்-1 கப்
முந்திரி-10-12
உலர்ந்த திராட்சை-2 ஸ்பூன்
ஏலக்காய்-4
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் நெய் ஊற்ற வேண்டும்.நெய் சூடானதும் அதில் முந்திரி,திராட்சை,மற்றும் பாசி பருப்பை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
வறுத்த பருப்பில் 1 கப் தேங்காய் பாலை ஊற்றி பிறகு ஏலக்காய் சேர்த்து 15 நிமிடம் பருப்பு வேகும் வரை மூடி வைக்கவும்.
பருப்பு நன்கு வெந்த பின் அதில் 1 கப் வெல்லம் சேர்த்து கிளறி விட வேண்டும்.
கடைசியில் தேவையான அளவு தேங்காய் பால் சேர்த்து கிளறினால் சுவையான பாசி பருப்பு பாயாசம் தயார்..தேவைப்பட்டால் வாசனைக்கு ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கொள்ளலாம்…