சுவையான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி??

Advertisement

பாலில் எராளமான உணவு வகைகளை செய்ய்யலாம்.பால் தான் சில உணவுகளுக்கு மிகுந்த சுவை கொடுக்க காரணமாக இருக்கிறது.இனிப்பு என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என எல்லோரையும் தன் பக்கம் இழுக்கும் திறமை கொண்டது.சர்க்கரை நோய் இருந்தாலும் அவர்களின் மனம் இனிப்பை தேடும். அப்படிப்பட்ட இனிப்பு வகைகளில் நாம் இன்றைக்கு செய்ய போவது பால் கொழுக்கட்டை..சரி வாங்க எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:-

அரிசி மாவு-1/2 கப்

பால்-1/2 கப்

தண்ணீர்-தேவையான அளவு

சர்க்கரை-1/2 கப்

நெய்-2 ஸ்பூன்

ஏலக்காய் பொடி-2 கிராம்

உப்பு-தேவையான அளவு

குங்குமப்பூ-சிறிது

பிஸ்தா-5-6

பாதாம்-5-6

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் அரிசி மாவு,பால் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்னர் மாவை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கட்டி உண்டாகாமல் கிளறி விட வேண்டும்.10 நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும்.

மாவை நன்கு ஆறவைத்த பிறகு அதில் நெய்யை ஊற்றி சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்க வேண்டும்.

வேறு ஒரு பாத்திரத்தில் பாலில் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.பின்பு உருண்டிய மாவை பாலில் போட்டவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.கடைசியில் பிஸ்தா மற்றும் பாதாமை கொண்டு அலங்கரியுங்கள்

20 நிமிடத்தில் இனிப்பான பால் கொழுக்கட்டை தயார்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>