சத்துக்கள் நிறைந்த வெஜிடபில் சூப் செய்வது எப்படி??

by Logeswari, Sep 16, 2020, 21:42 PM IST

இப்பொழுது இருக்கும் கொரோனா காலத்தில் நமக்கு நோயை எதிர்த்து போராட உடம்பில் அதிக அளவிலான சத்துக்கள் தேவை.. காய்கறிகளில் உள்ள நன்மைகள் வேறு எந்த உணவிலும் இருக்காது.ஆதலால் தினமும் காய்கறிகளை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.அப்பொழுது தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மலரும்.. ஆரோக்கியமும், சத்தும் நிறைந்த வெஜிடபில் சூப் செய்வது எப்படி என்பதை பார்க்க்லாம்.இதில் பல வித காய்கறிகள் இடம் பெறுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது..

தேவையான பொருள்கள்:-

கோஸ்-50 கிராம்

பீன்ஸ்-50 கிராம்

கேரட்-50 கிராம்

சோளமாவு-3 ஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

வெண்ணெய்-1 ஸ்பூன்

பட்டை-சிறிது

லவங்கம்-சிறிது

பிரியாணி இலை-சிறிதளவு

மிளகு தூள்-2 ஸ்பூன்

வெங்காயம்-1

தக்காளி-1

கொத்தமல்லி-சிறிதளவு

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் ஊற்றவும்.வெண்ணெய் சூடான பிறகு அதில் பட்டை,லவுங்கம்,பிரியாணி இலை,வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

வதங்கிய பிறகு கேரட்,பீன்ஸ்,கோஸ் போன்ற காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

காய் வெந்த பிறகு தேவயான அளவு மிளகு தூள் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

சுவையான,சூடான,ஆரோக்கியமான வெஜிடபில் சூப் தயார்..கடைசியில் சூப்பில் மேல் கொத்தமல்லி தூவி அழகாக அலங்கரித்து பரிமாறுங்கள்

READ MORE ABOUT :

More Samayal recipes News

அதிகம் படித்தவை