இதயத்திற்கு நன்மை தரும் சூடான ஓட்ஸ் தோசை செய்வது எப்படி??

how to make oats dosai in tamil

by Logeswari, Sep 18, 2020, 18:03 PM IST

ஓட்ஸில் இயற்கையாகவே உடல் பருமனை குறைக்கும் தன்மை உள்ளதால் குண்டாக இருப்பவர்கள் காலை டிபனாக ஓட்ஸ்யை கஞ்சியாக எடுத்து கொள்வார்கள்.தினமும் ஓட்ஸில் ஒவ்வொரு வகையான உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் இதய நோய் போன்ற கொடிய நோய்கள் யாவும் தடம் தெரியாமல் அழிந்து விடும்.சரி வாங்க நாம் இன்றைக்கு ஓட்ஸில் தோசை செய்வது எப்படி என்பதை பார்க்க போகிறோம்..

தேவையான பொருள்கள்:-

ஓட்ஸ்-1 கப்

அரிசி மாவு-1/4 கப்

தயிர்-1/2 கப்

மிளகு தூள்-1 ஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

எண்ணெய்-தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஓட்ஸ்,அரிசி மாவு,தயிர்,மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும்.

கலந்த கலவையை ஒரு 30 நிமிடம் ஊற வைக்கவும்..அப்பொழுது தான் ஓட்ஸ் மாவில் நன்றாக ஊறி தோசை சுவையாக வரும்.

அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் காய்ந்தவுடன் அதில் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்த மாவை ஊற்ற வேண்டும்.

பத்தே நிமிடத்தில் ஒரு சுவையான..ஆரோக்கியமான…சிற்றுண்டி ரெடி..ஓட்ஸ் தோசையுடன் தேங்காய் சட்னி அல்லது கார சட்னியை சேர்த்து சாப்பிட்டால் சுவை டக்கரா இருக்கும்!!

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Samayal recipes News

அதிகம் படித்தவை