ஏதாவது பண்டிகை வரும் பொழுது தான் இல்லத்தரசிகளுக்கு இனிப்பு செய்வதற்கு ஆர்வம் வரும். அப்படிப்பட்ட ஆர்வத்தை சரியாக பயன்படுத்தி வீட்டில் இருப்பவர்களை உங்களின் சமையலுக்கு அடிமையாக்கி கொள்ளுங்கள். தீபாவளி பண்டிகையில் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களுக்கு பலகாரம் செய்து கொடுத்தல் என்பது ஒரு வழக்கமாகும். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு பிரெட் அல்வா செய்து கொடுங்கள். சரி வாங்க பிரெட் அல்வா செய்வது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-
பிரெட் - 6
எண்ணெய் -தேவையான அளவு
தேங்காய்ப்பால் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்.
செய்முறை:-
முதலில் பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். பிறகு சூடான எண்ணெயில் பிரெட் துண்டுகளை பொறித்து கொள்ளவும்.
பின்னர் தவாவில் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து கிளறி விடவும். 10 நிமிடம் கழித்து பொரித்த பிரெட்டை சேர்த்து கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கணும்.
அல்வா பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அனைத்து விட வேண்டும். கடைசியில் ஏலக்காய் தூளை தூவினால் சுவையான.. இனிப்பான.. பிரெட் அல்வா ரெடி..