நாவூற வைக்கும் காரசாரமான நண்டு தொக்கு செய்வது எப்படி??

by Logeswari, Nov 17, 2020, 19:25 PM IST

நண்டு என்றாலே அதலில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளது. மார்ப்பில் உள்ள சளியை முழுவதும் நீங்க மிளகு தூள் கலந்த நண்டை சாப்பிட வேண்டும். தொண்டை கரகரப்புக்கு நண்டில் சூப் வைத்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இது போல பல வித மருத்துவ குணங்கள் நிறைந்த நண்டில் காரசாரமான தொக்கு செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
நண்டு - 1 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 3
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
புதினா - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
மஞ்சள் - 1/4 ஸ்பூன்
தனியா பொடி - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 100 லிட்டர்
சீரகப்பொடி - 1/4 ஸ்பூன்
மிளகுப்பொடி - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை - சிறிதளவு

செய்முறை:-
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு கொள்ளவும். எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை கொண்டு தாளித்து கொள்ளவும். பொன்னிறமாக மாறிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

ஒரு பக்கம் மிக்சியில் தக்காளி, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை வாணலியில் சேர்த்து கிளற வேண்டும். நன்கு வதங்கிய பிறகு கரம் மசாலா, மஞ்சள் தூள், தனியா பொடி, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

கடைசியாக சுத்தம் செய்த நண்டை சேர்த்து மசாலாவுடன் பிரட்டி கொள்ளவும். பிறகு தொக்கு பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 15 நிமிடம் கழித்து சீரக பொடி, மிளகு பொடி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கி விட வேண்டும்.

சுவையான நண்டு தொக்கு தயார்.. சூடான சாதத்துடன் சுவைத்தால் சுவை அட அட... சொல்ல வார்த்தையே இல்லை..

More Samayal recipes News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை