நோக்கியா தயாரிப்புகள் வேண்டும் என்று விரும்பும் பயனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பிற்கிணங்க கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பாவில் அறிமுகமான நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் நவம்பர் 26ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.
வாட்டர்டிராப் ஸ்டைல் டிஸ்ப்ளே நாட் மற்றும் பின்பக்கம் இரண்டு காமிராக்கள் இதில் அமைந்துள்ளன. பின்பக்கம் விரல் ரேகை உணரியும் (ஃபிங்கர்பிரிண்ட் சென்ஸார்) உள்ளது.தற்போது வெளியாகியுள்ள டீசரில் இந்தியாவில் அறிமுகமாகும் நாள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், தகவல்கள் நவம்பர் 26 அன்று அறிமுகம் இருக்கலாம் எனக் கூறுகின்றன.
நோக்கியா 2.4 சிறப்பம்சங்கள்:
சிம் : இரட்டை நானோ சிம்
தொடுதிரை : 6.5 அங்குலம் எச்டி+ (720X1600 பிக்ஸல் தரம்); 20:9 விகிதாச்சாரம்
இயக்கவேகம்: 2 ஜிபி மற்றும் 3 ஜிபி
சேமிப்பளவு : 32 ஜிபி மற்றும் 64 ஜிபி (மைக்ரோ எஸ்டி மூலம் அதிகரிக்கலாம்)
முன்பக்க காமிரா: 5 எம்பி ஆற்றல்
பின்பக்க காமிரா: 13 எம்பி + 2 எம்பி இரட்டை காமிராக்கள்
பிராசஸர் : மீடியாடெக் ஹீலியோ பி22 SoC
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10
மின்கலம் : 4500 mAh
4ஜி எல்டிஇ, எஃப்எம் ரேடியோ, மைக்ரோ யூஎஸ்பி போர்ட் வசதிகள் கொண்டது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டதின் அடிப்படையில் ஏறக்குறைய ரூ.10,500/- இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.